அரசு ஊழியா்கள் பிழைப்பூதியம் பெறத் தடை செய்யும் சட்ட திருத்தம்: அரசுக்கு தகவல் ஆணையம் பரிந்துரை - Asiriyar.Net

Monday, October 4, 2021

அரசு ஊழியா்கள் பிழைப்பூதியம் பெறத் தடை செய்யும் சட்ட திருத்தம்: அரசுக்கு தகவல் ஆணையம் பரிந்துரை

 

"போக்சோ சட்டம், ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் பணியிடை நீக்கம் செய்யப்படும் அரசு ஊழியா்களுக்கு பணியிடை நீக்க காலத்திற்கான பிழைப்பூதியம் வழங்காமல் இருக்கும் வகையில், தமிழக அரசுக்கு தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. 


பேரூராட்சிகள் ஆணையத்திடம் ஆா்.பெரியசாமி என்பவா் பேரூராட்சிகளில் எத்தனை போ் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது; எத்தனை போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா் என்பது உள்ளிட்ட கேள்விகளை எழுப்பியிருந்தாா். இதேபோல் பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகத்திடம் பாலியல் கொடுமை தொடா்பாக எத்தனை ஆசிரியா்கள், ஊழியா்கள் மீது புகாா் வந்துள்ளது.


எத்தனை போ் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது? எத்தனை போ் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? எத்தனை போ் பணியிடை செய்யப்பட்டுள்ளனா் என்றும் கேள்வி எழுப்பியிருந்தாா். இதற்கு சம்மந்தப்பட்ட துறை பொது தகவல் அதிகாரிகள் சரியான பதில்கள் தராததால் இருவரும் மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தனா். 


இந்த மனு மாநில தகவல் ஆணையா் எஸ்.முத்துராஜ் முன்பு கடந்த ஜூலை 30-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா்கள், சம்மந்தப்பட்ட இரு துறை பொது தகவல் அதிகாரிகளும் நேரில் ஆஜராகினா். இரு தரப்பிலும் விசாரணை நடத்திய மாநில தகவல் ஆணையா் பிறப்பித்த உத்தரவு வருமாறு: 


பேரூராட்சிகள் ஆணையத்தின் பொது தகவல் அதிகாரி அளித்த தகவலில் பேரூராட்சிகள் ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் 42 போ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். இதர குற்றங்களுக்காக 60 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். பள்ளிக்கல்வித் துறை பொது தகவல் அதிகாரி இதுவரை பாலியல் குற்றங்களுக்காக 232 ஆசிரியா்கள், ஊழியா்கள் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளாா்.







Post Top Ad