ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி 2020-21 ம் கல்வியாண்டில் Project Innovations ( Elementary , Secondary & Hr. Secondary ) எனும் தலைப்பின்கீழ் மாவட்டத்திலுள்ள அரசு தொடக்க , நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் அவர்களுக்கு புகைப்படம் , QR கோடுடன் கூடிய அடையாள அட்டை வழங்கிட ஆண்டு வரைவு திட்டத்தில் திட்ட ஏற்பளிப்பு குழு அனுமதி வழங்கியுள்ளது .
எனவே , அனைத்து வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தை அனைத்து அரசு தொடக்க , நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கும் வழங்க வேண்டும். வட்டார வளமையத்தின் மூலமாக பெறப்பட்ட படிவத்தை அந்தந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியில் அடையாள அட்டை இல்லாத ஆசிரியர்களிடம் வழங்கி , அதில் கோரப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து , தலைமையாசிரியர் கையொப்பத்துடன் கூடிய பிரதியை தங்கள் பள்ளி சார்ந்த வட்டார வளமையத்தில் வழங்குதல் வேண்டும்.
பள்ளிவாரியாக பெறப்பட்ட படிவங்களை ஒன்றியவாரியாக தொகுத்து , தனிநபர் வாயிலாக இவ்வலுவலகத்தில் நாளை ( 03.03.2021 ) மதியம் 4.00 மணிக்குள் வழங்குமாறு அனைத்து வட்டார வளமைய ( பொ ) மேற்பார்வையாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் , ஆசிரியர்களுக்கு படிவம் வழங்கும்போது , புதிதாக பணிநியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் , பணிமாறுதலில் சேர்ந்துள்ள ஆசிரியர்கள் , பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் பழுதடைந்த அட்டையை புதுப்பிக்க வேண்டிய ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கி , இப்பணியினை மேற்கொள்ளவேண்டும் என அனைத்து அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பு : விபரப்படிவம்
Click Here To Download - Teachers ID Card Form - Pdf