"ஆசிரியா்களுக்கு கொரோனா அறிகுறி இருந்தால்?" - பள்ளிக்கல்வி முதன்மை செயலர் அறிவுரை - Asiriyar.Net

Wednesday, March 17, 2021

"ஆசிரியா்களுக்கு கொரோனா அறிகுறி இருந்தால்?" - பள்ளிக்கல்வி முதன்மை செயலர் அறிவுரை

 






பள்ளிகளில் கொரோனா தடுப்பு விதிகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என, பள்ளி கல்வி துறை செயலகம் அறிவுறுத்தி உள்ளது.



இதுகுறித்து, பள்ளி கல்வி முதன்மை செயலர் தீரஜ்குமார் வெளியிட்டு உள்ள அறிவுறுத்தல்: 


கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, விழிப்புணர்வுடன் பள்ளிகள் இயங்க வேண்டியது அவசியம். கொரோனா தடுப்பு விதிகளை தவறாமல் கடைபிடிக்க, பள்ளி நிர்வாகத்தினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.



ஆசிரியா்களுக்கு அறிகுறி இருந்தால் வேறு யாருடனும் தொடா்புகொள்வதைத் தவிா்க்க வேண்டும். இதுபோன்ற பாதுகாப்பு வழிமுறைகளைத் தொடா்ந்து கல்வித் துறை அலுவலா்கள் கண்காணிக்க வேண்டும்



ஒவ்வொரு மாணவர் மற்றும் பணியாளர்கள் கட்டாயம் முக கவசம் அணிவதையும், சமூக இடைவெளியை பின்பற்றுவதையும் உறுதிப்படுத்த வேண்டும். வகுப்பறைகள் மற்றும் பள்ளி, அலுவலக வளாகங்களில், கிருமிநாசினி தெளித்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இவ்வாறு, அவர் அறிவுறுத்தி உள்ளார்.


No comments:

Post a Comment

Post Top Ad