அரசு ஊழியர் ஓய்வு வயதை 60 எதிர்த்து வழக்கு - Asiriyar.Net

Saturday, March 20, 2021

அரசு ஊழியர் ஓய்வு வயதை 60 எதிர்த்து வழக்கு

 



அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 60ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்ய கோரிய வழக்கு

அரசு ஊழியர் ஓய்வு வயது நீட்டிப்பை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு தரப்பில் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சேர்ந்த கோபிநாத், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஓய்வு ெபறும் வயதை 60 ஆக உயர்த்தி கடந்த பிப். 25ல் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் வேலையில்லாத திண்டாட்டம் அதிகரிக்கும்.



போதிய வேலை வாய்ப்பின்றி இளைஞர்கள் வறுமையில் தள்ளப்படுவர். எனவே, ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்ய வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோர், தமிழக அரசுத் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.











No comments:

Post a Comment

Post Top Ad