10ம் வகுப்பு படித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலை | சம்பளம் ரூ.19,900 | கடைசி தேதி 10.03.2021
இந்திய அஞ்சல் துறையில் கனரக மோட்டார் வாகனம் ஓட்டுவதற்கான தகுதி உள்ளவர்களுக்கு 12 பணியிடங்கள் உள்ளன. ஓட்டுநர் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
அவர்களுக்கு மாதம் ரூ.19,900 ஊதியம் வழங்கப்படும் இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள 12 Staff Car Driver பணி யிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
10வது தேர்ச்சி பெற்று கனரக மோட்டார் வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் பெற்ற தகுதியும், திறமையும் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் ஆர்வம் உள்ளவர்கள் www.indiapost.gov.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 10.03.2021 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
ஓட்டுநர் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.19,900 ஊதியம் வழங்கப்படும். மேலும் விவரங்களை www.indiapost.gov.in என்ற அஞ்சல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். விளம்பர அறிவிப்பைக் காண்க