அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்? - CEO அறிவுறுத்தல் - Asiriyar.Net

Friday, January 15, 2021

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்? - CEO அறிவுறுத்தல்

 

 


வருகின்ற ஜனவரி 19ஆம் தேதி முதல் 10ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப் படுகின்றன வகுப்புகள் தொடங்கப்பட உள்ள நிலையில் எடுக்கக்கூடிய ஆசிரியர்கள் மட்டுமின்றி அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது 



தமிழகம் முழுவதும் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன மற்றும் விளையாட்டு வகுப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் பங்கேற்று வழிகாட்டு முறைகளை விளக்கி கூறினார் அப்போது பள்ளிகளில் அரசு வகுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்தார் 



வகுப்பறையில் மாணவர்களை 6 அடி இடைவெளியில் அமர வைக்க வேண்டும் என்றும் கூறினார் எக்காரணம் கொண்டும் மாணவர்கள் பள்ளியில் கூடுதலை தவிர்த்தல் வேண்டும் மேலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுக்க கூடிய ஆசிரியர்கள் மட்டுமின்றி அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வரவேண்டும் 


வகுப்பு நடத்தக்கூடிய ஆசிரியர்கள் தவிர மற்ற ஆசிரியர்கள் மாணவர்கள் வெளியே நடமாட கண்காணிக்க வேண்டும் வகுப்புகளிலும் கிருமிநாசினி தடுப்பு மருந்துகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கட்டாயமாக கவசம் அணிய வேண்டும் என்றும் முதன்மைக்கல்வி அலுவலர் குணசேகரன் அவர்கள் அறிவுறுத்தினார்









Post Top Ad