பிற வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி? - Asiriyar.Net

Friday, January 15, 2021

பிற வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி?

 


பொதுத்தேர்வு எழுதும் பிளஸ் 2 பத்தாம் வகுப்பு மாணவர்களை தவிர பிற வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்க வாய்ப்பு இருப்பதாக பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன 




தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் ஏப்ரல் மாதங்களில் கொரோனா தீவிரம் அடைந்ததால் மாநில பாடத்திட்டத்தில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இறுதித் தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டது நடப்பு ஆண்டில் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடநூல்கள் வழங்கப்பட்டுள்ளன தனியார் பள்ளிகளில் கட்டணம் பெறப்பட்டுள்ளது அதனால் பூஜ்ஜியம் கல்வி ஆண்டாக அறிவிக்க வாய்ப்பில்லை 75 சதவீத வேலை நாட்கள் கடந்துவிட்டது 




இதற்குப் பிறகு தொடக்க நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகளை திறந்து அவர்களுக்கு வகுப்புகளை நடத்துவதில் பல சிக்கல்கள் உள்ளன மேலும் உருமாறிய கொரோனா குறித்த அச்சம் தடுப்பூசிகள் குறித்த புரிதல் போன்ற காரணங்களால் 5 முதல் 12 வயது வரையுள்ள குழந்தைகளின் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப தற்போதும் தயக்கம் காட்டி வருகின்றனர் 


கருத்து கேட்பு கூட்டம் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டே நடத்தப்பட்டது எனவே பிற வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஆண்டைப் போன்று இந்த ஆண்டும் அனைவருக்கும் தேர்ச்சி வழங்க வாய்ப்புள்ளது எனினும் இதுகுறித்து இறுதி முடிவை தமிழக அரசு விரைவில் அறிவிக்கும் என்றனர்





No comments:

Post a Comment

Post Top Ad