தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கிட தகுதிவாய்ந்த இடைநிலை ஆசிரியர்கள் / காப்பாளர்களை 12.01.2021 அன்று சைதாப்பேட்டை நந்தனம் M.C ராஜா மாணவர் விடுதிக்கு அழைத்துவர சம்பந்தப்பட்ட மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி கலந்தாய்வுக்கு கலந்துக்கொள்ள வரும் ஆசிரியர்கள் கட்டாயமாக முகக்கவசம் , அடையாள அட்டை அணிந்து வரவேண்டும். கலந்தாய்வுக்கு அழைக்கப்படும் நபர் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவர் மற்ற யாருக்கும் கலந்தாய்வுக்கு செல்ல அனுமதியளிக்கப்படாது.
மேலும் , சமூக இடைவெளியை பின்பற்றியே இருக்கையில் அமரவேண்டும் , காய்ச்சல் மற்றும் உடல்நலக்குறைவு உள்ள நபர்கள் தனியறையில் மட்டுமே இருக்கவேண்டும் என்ற விவரத்தினையும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு தெரிவித்திட மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் இதன்மூலம் அறிவுறுத்தப்படுகிறது.
Click Here To Download - ADW HM Promotion Counselling Letter - Pdf