குழந்தைக்காக, கணவர் இரண்டாம் திருமணம் செய்ய மறுத்ததால், அரசுப் பள்ளி ஆசிரியை, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி, வயலுார் ரோட்டில் உள்ள குமரன் நகரைச் சேர்ந்தவர் சாந்தம்மை, 39; திருவெறும்பூர் அருகே உள்ள அரசுப் பள்ளியில், ஆசிரியை. இவர், புதுக்கோட்டையைச் சேர்ந்த அஸ்வின், 43, என்பவரை, 10 ஆண்டுகளுக்கு முன், திருமணம் செய்து கொண்டார்.தம்பதிக்கு குழந்தை இல்லை. குழந்தைக்காக, கணவரை இரண்டாம் திருமணம் செய்து கொள்ள சாந்தம்மை வற்புறுத்தி உள்ளார். அஸ்வின் மறுத்து விட்டதால், சாந்தம்மை விரக்தி அடைந்தார்.
சில வாரங்களுக்கு முன், 'டைபாய்டு' காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சாந்தம்மை, திருச்சியில் தாய் வீட்டுக்கு சென்று தங்கியிருந்தார். தாயிடமும், தன்னால் தான் கணவருக்கு குழந்தை பிறக்கவில்லை என, புலம்பி வந்துள்ளார்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, சாந்தம்மை, தாய் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
No comments:
Post a Comment