தமிழகத்தில் அரசு பழங்குடியினர் நல்லா உண்டு உறைவிடப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை ஒப்பந்த முறையில் தொகுப்பு ஊதியத்தில் நிரப்ப அரசு ஆணையிட்டுள்ளது.
பழங்குடியினர் நல மாநில இயக்குனர் வி.சி ராகுல் அவர்கள் தர்மபுரி ,திண்டுக்கல் ,ஈரோடு உள்ளிட்ட 13 மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவின்பேரில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியில் 48 இடங்கள் இருப்பதாகவும் ,பட்டதாரி ஆசிரியர் பணியில் 117 இடங்கள் இருப்பதாகவும், இடைநிலை ஆசிரியர் பணியில் 33 இடங்கள் இருப்பதாகவும், மொத்தமாக 198 இடங்கள் காலியாக உள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த காலிப்பணியிடங்களை இடைநிலை ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் ஆக ரூபாய் 8,000, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூபாய் 9,000 ஆயிரம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூபாய் 10,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிப்பணியிடங்களை எழுத்துத்தேர்வு மூலமாகவும், நேர்முகத்தேர்வு மூலமாகவும், வகுப்பு நடத்துதல் மூலமாகவும் ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென அறிவித்துள்ளார்
Click Here To Download - Vacancy List - Director Proceedings - Pdf
No comments:
Post a Comment