போராட்டங்களில் ஈடுபட்ட 118 ஆசிரியர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு - Asiriyar.Net

Saturday, December 5, 2020

போராட்டங்களில் ஈடுபட்ட 118 ஆசிரியர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு

 


போராட்டங்களில் ஈடுபட்ட 118 ஆசிரியர்கள் 37 விவசாயிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் ஒருங்கிணைந்த பள்ளிகளில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க 20 ஆண்டுகள் ஆசிரியர்கள் பணி புரிந்தனர் 


இந்த ஆசிரியர்களின் பணி சேவையை அளித்து அங்கீகரித்து காலமுறை ஊதியத்தில் பணி நிரந்தரம் செய்யக்கோரி தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர் சங்கத்தினர் நேற்று முன்தினம் திருச்சி பஸ் நிலையம் அருகே இருந்து சென்னைக்கு சென்று தமிழக முதல்வரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க பாதயாத்திரையாக நூற்றுக்கும் மேற்பட்டோர் புறப்பட்டனர் அவர்களை கண்டோன்மெண்ட் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர் 



அவர்கள் அனைவரும் திருச்சியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு பின்னர் மாலை அவர்கள் விடுவிக்கப்பட்டனர் இந்நிலையில் பாதயாத்திரை செல்ல முயன்ற 92 ஆசிரியர்கள் உட்பட 118 ஆசிரியர்கள் மீது கண்டோன்மெண்ட் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் 






No comments:

Post a Comment

Post Top Ad