Income Tax - புதிய வரி விதிப்பு முறைதான் பெஸ்ட்! அதிக பலன் உடையதா? - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, February 2, 2023

Income Tax - புதிய வரி விதிப்பு முறைதான் பெஸ்ட்! அதிக பலன் உடையதா?

 



புதிய வருமான வரி பிரிவில் பல்வேறு மாற்றங்களை செய்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். புதிய வருமான வரி விதிப்பு முறையில் பல அதிரடி சலுகைகள் கொண்டு வரப்பட்டு உள்ளன.

ஆனால் பழைய வருமான வரி விதிப்பு முறையில் அப்படி எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதன் மூலம் பழைய வருமன வரி பிரிவை பயன்படுத்தும் ஊழியர்கள் புதிய வருமான வரி பிரிவிற்கு வர வேண்டும் என்று மத்திய அரசு சொல்லாமல் சொல்லி இருக்கிறது.


இந்த மாற்றத்தை புரிந்து கொள்ளும் முன் தற்போது இருக்கும் வருமான வரி விதிப்பு முறைகள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும்.


இரண்டு முறைகள்


தற்போது வருமான வரி விதிப்பில் இரண்டு முறைகள் உள்ளன. இந்த இரண்டு முறைகளில் ஒன்றை மக்கள் தேர்வு செய்ய முடியும். *முதல் முறை*- பழைய வரி விதிப்பு (old regime) முறை.


இதில் நீங்கள் வாங்கும் வருட வருமானம் 2.5 லட்சத்திற்கு வரி இல்லை.


2.5 லட்சத்தில் இருந்து 5 லட்சம் வரை வருமானம் வாங்கினால் 5 சதவிகிதம் வரி இருக்கும்.


5 லட்சத்தில் இருந்து 10 லட்சம் வரை வாங்கினால் 20 சதவிகிதம் வரி இருக்கும்.


பழைய வரி விதிப்பு முறை


இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் கொஞ்சம் விலக்கு பெற முடியும். 2.5 லட்சத்தில் இருந்து 5 லட்சம் வரை வருமானம் வாங்குபவர்கள் இன்னும் அதிக விலங்குகளை பெற முடியும். இந்த வரி விதிப்பில் இந்த முறையும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆம் இந்த விதிப்பு முறையைத்தான் பலரும் பயன்படுத்தி வருகிறார்கள். இதில் வரி அதிகம் என்றாலும் 80C, 80D போன்ற சலுகைகள் இருந்தன. இப்போது வரி விதிப்பில் எந்த மாற்றத்தையும் செய்யாமல் புதிய வரி விதிப்பில் (new regime ) மட்டும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.


புதிய வரி விதிப்பு


பழைய முறை வேண்டாதவர்கள் புதிய முறையை பின்பற்ற முடியும். புதிய முறையில் இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் கொஞ்சம் விலக்கு பெற முடியாது. அதே சமயம் புதிய வருமான வரி பிரிவில் உள்ளவர்களுக்கு தனிநபர் வருமான வரி - டாக்ஸ் ரிபேட் (Tax rebate) ரூ.7 லட்சம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. அதாவது 7 லட்சம் வரை இவர்கள் முறையான செலவு ஆவணங்களை காட்டி, வருமான வரி கட்டுவதில் இருந்து விலக்கை பெறலாம். 2.5 லட்சமாக இருந்த ஜீரோ வரி விதிப்பு 3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. எளிதாக சொல்ல வேண்டும் என்றால் 3 லட்சம் வரை ரிட்டர்ன்ஸ் பைல் செய்ய வேண்டியது இல்லை. 7 லட்சம் வரை டாக்குமெண்ட் கொடுத்து மொத்தமாக வரி விலக்கை பெறலாம். இது புதிய வரி விதிப்பு முறைக்கு மட்டுமே பொருந்தும்.


விளக்கம்

இந்த டேபிளை பார்த்தால் எளிதாக புரியும்,


0 - 300000 : 0 சதவீத வரி


300000-600000 : 5 சதவீத வரி


600000 -900000 : 10 சதவீத வரி


900000 - 1200000 : 15 சதவீத வரி


1200000 -1500000 : 20சதவீத வரி


15 above : 30 சதவீத வரி


இதில் ரூ.15.5 லட்சம் மற்றும் அதற்கு மேல் வருமானம் உள்ள தனிநபர்கள் புதிய வரி முறையில் 1.5 லட்சம் வரை வருமான வரி கட்ட வேண்டி இருக்கும். ஆவணங்களை காட்டி, அதன்பட்சம் 1 லட்சம் விலக்கு பெறலாம். அதாவது 1 லட்சம் விலக்கு பெற்றாலும் ரூ.15.5 லட்சம் மற்றும் அதற்கு மேல் வருமானம் உள்ள தனிநபர்கள் புதிய வரி முறையில் ரூ.52,500 'கட்டாயம்' வரி செலுத்த வேண்டும். புதிய வருமான வரி விதிப்பு முறையில் பல அதிரடி சலுகைகள் கொண்டு வரப்பட்டு உள்ளன. ஆனால் பழைய வருமான வரி விதிப்பு முறையில் அப்படி எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதன் மூலம் பழைய வருமன வரி பிரிவை பயன்படுத்தும் ஊழியர்கள் புதிய வருமான வரி பிரிவிற்கு வர வேண்டும் என்று மத்திய அரசு சொல்லாமல் சொல்லி இருக்கிறது.


Post Top Ad