தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு – தேர்வுத்துறை முக்கிய அறிவுறுத்தல்!! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, February 19, 2023

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு – தேர்வுத்துறை முக்கிய அறிவுறுத்தல்!!

 



தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான அகமதிப்பீடு மதிப்பெண்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தேர்வுத்துறை அறிக்கை


தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டுக்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடத்தப்பட இருக்கிறது. இந்த தேர்வுக்கு முன்னதாக இம்மாதம் செய்முறை தேர்வுகள் துவங்க உள்ளது. இந்த நிலையில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான அகமதிப்பீடு மதிப்பெண்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யும்படி தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக முதன்மைக் கல்வி அலுவலர்கள், அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


அந்த வகையில், அனைத்து பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் www.dge1.tn.gov.in என்ற அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்திற்கு சென்று, USER ID மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி அகமதிப்பீட்டு மதிப்பெண்களை பதிவு செய்யலாம். இதற்கான காலக்கெடு 17.02.2023 முதல் 28.02.2023 வரை கொடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பிப்ரவரி 28 வரை தலைமையாசிரியர்கள் அகமதிப்பீட்டு மதிப்பெண்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்து, மார்ச் 2 ஆம் தேதிக்குள் அதனை மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்கள் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.



Post Top Ad