School Team Visit - தயார் நிலையில் வைக்க வேண்டியவைகள் & Check List - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, February 14, 2023

School Team Visit - தயார் நிலையில் வைக்க வேண்டியவைகள் & Check List

 



School Team Visit - பள்ளிகளில் அமைச்சர், மாநில அளவிலான உயர்நிலை அலுவலர்கள் ஆய்வு - தயார் நிலையில் வைக்க வேண்டியவைகள்


மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாநில அளவிலான உயர் நிலை அலுவலர்கள் குழு பள்ளிகளை பார்வையிட உள்ளதால், சார்ந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்


01) பள்ளி வளாகம் முழுவதும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.


02) பள்ளி அலுவலகத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். 


03) ஆசிரியர் அறைகளை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். 

04)நூலகம், அறிவியல் ஆய்வுக்கூடம், உயர் தொழில்நுட்பணினி ஆய்வுக் கூடம் ஆகியவற்றை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். 

05) கடந்த மூன்று ஆண்டுகளுக்கான மாணவர் சேர்க்கை விவரங்கள், தேர்ச்சி சதவீதம், இனவாரியாக மாணவனுக்கு வழங்கப்பட்ட கல்வி உதவித்தொகைகள், தாங்கள் தலைமையாசிரியர் பொறுப்பு ஏற்ற பிறகு செய்யப்பெற்ற மாற்றங்கள் கட்டமைப்பு வசதிகள் குறித்து புள்ளிவிவரங்கள் தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.


06) ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ள பள்ளி கட்டமைப்பு சார்ந்த படிவங்களில் குறிப்பிட்டவாறு பள்ளிக்கு என்ன தேவை என்ற விவரங்களை தெளிவாக வைத்திருக்க வேண்டும்.

07) விலையில்லா பாடப்புத்தகங்கள் அனைத்து மாணவர்களும் வழங்கப்பட்டு, வழங்கல் பதிவேட்டில் கையொப்பம் பெற்று இருக்க வேண்டும்.


08) அனைத்து மாணவர்களுக்கும் கல்வி தொலைக்காட்சி கால அட்டவணை வழங்கப்பட்டிருக்க வேண்டும். 


09) அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகை தர வேண்டும். ஆளறி அட்டை(ம்) அணிந்திருக்க வேண்டும். 


10) பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கான குழு,விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கும் குழு அமைத்து இருக்க வேண்டும்.சுற்றறிக்கையில் ஆசிரியர்களிடம் கையொப்பம் பெற்று இருக்க வேண்டும்.3 rd term books வழங்கியிருக்க வேண்டும்


11)உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகம் தூய்மையாக வைக்கப்பட்டு இயங்கு நிலையில் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.


12) கல்வி தொலைக்காட்சி அட்டவணை , பெண்குழந்தை பாதுகாப்பு பிளக்ஸ் பேனர் , மாணவர் மனசு பெட்டி பள்ளியின் நுழைவு வாயிலில் வைத்திருக்கவேண்டும். 13) மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் எந்தப் பாடப் பிரிவிற்கு சேர்க்கை வழங்கப்படுகிறது என்ற விவரத்தை அறிவிப்பு பலகை வைக்கப்பட வேண்டும்.


14) அனைத்து பாட ஆசிரியர்களும் வகுப்பு வாரியாக பாட வாரியாக கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் நேரம் பாட கருத்து சார்ந்து பாடப்புத்தகத்தையொட்டி கூர்ந்து கவனித்து பாடக்குறிப்பு எழுதி வைத்திருக்க வேண்டும். class work home work register work done register முடித்திருக்க வேண்டும்.


15) ஆசிரியர் பாடக்குறிப்பு ஏட்டில் தன் விபரம், 3 ஆண்டு தேர்ச்சி விபரம், கால அட்டவணை, பாடத்திட்டம், கற்றல் அடைவுகள், கற்றல் கருவிகள் ,மெல்ல கற்போர் விவரம் குறித்து தெளிவாக எழுதியிருக்க வேண்டும்


16) மாணவர்கள் வருகை, ஆசிரியர் வருகை செயலியில் கண்டிப்பாக முடித்திருக்க வேண்டும். 


17) சேர்க்கை -நீக்கல் பதிவேடு, மாற்றுச் சான்றிதழ் பதிவேடு, வருகை பதிவேடுகள் ,பதிலி பதிவேடு , தஆ வகுப்பறை உற்று நோக்கல் பதிவேடு முழுமையாக முடித்திருக்க வேண்டும். 


18) மாணவர்கள் சேர்க்கை மேற்கொள்ளப்பட்ட விவரங்கள், CIVIL WORKS- ALL KIND OF BUILDING DETAILS EMIS இணைய தளத்தில் நிகழ் நிலையில் வைத்திருக்க வேண்டும். 


19) மாணவர்களுக்கு பள்ளி நூலக புத்தகங்கள் வழங்கி, உரிய பதிவேடுகள் பேணப்பட வேண்டும் 


20) சிறுநீர் கழிப்பிடம் கழிப்பறைகள் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தி தூய்மையாக, தண்ணீர் வசதியுடன் இயங்கு நிலையில் வைத்திருக்க வேண்டும்.


21) பாட இணை செயல்பாடுகள், மன்ற செயல்பாடுகள் பதிவேடுகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்


22) அனைத்து தகவல்களும், தகவல் பலகையில், புதுப்பித்து நிகழ்நிலையில் வைத்திருக்க வேண்டும்


23)வகுப்பறையில் காலை வழிபாட்டு நிகழ்வுகள் நடத்த வேண்டும் 24) staff meeting record மற்றும் சுற்றறிக்கை பதிவேடுகள் தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும்


25) SMC . SMDC தீர்மானப் பதிவேடுகள், பெஆக பதிவேடுகள் தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும் சமக்ரா நிதி செலவழிக்கப்பட வேண்டும்








Click Here To Download - School Team Visit - Pdf


Click Here To Download - School Team Visit - Check List - Pdf

Post Top Ad