ஆசிரியர் பணி வயது வரம்புக்கு எதிரான வழக்கு தள்ளுபடி! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, October 13, 2021

ஆசிரியர் பணி வயது வரம்புக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

 


தமிழகத்தில் முதுநிலை ஆசிரியர் பணிக்கான வயது வரம்பினை உயர்த்துவது குறித்து தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.


வயது வரம்பு:


தமிழகத்தில் 1990 வரை படிப்பு, பணிமுன் அனுபவம் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் வழங்கப்பட்ட வயது மூப்பு சான்றிதழ் அடிப்படையில் அரசுப்பணிகளில் தகுதியானோர் நியமனம் செய்யப்பட்டனர். ஆசிரியர் பணிகளுக்கும் அவ்வாறே தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்பட்டது. அதன் பின்னர் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு பின் வயது வரம்பு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர். 2012 முதல் எழுத்து தேர்வு மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டது. இத்தகைய பணி நியமன முறையில் 57 வயது நிரம்பியவர்களும் ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.


அதன் பின்னர் கடந்த 31.01.2020 அன்று ஆசிரியர் பணிக்கு வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 40 ஆகவும், இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5 ஆண்டுகள் தளர்வு வழங்கி 45 வயதாகவும் நிர்ணயம் செய்து பணியாளர் மற்றும் நிர்வாகத்துறை அதிகாரி அவர்களால் அரசாணை வெளியிடப்பட்டது. இவ்வாறு வயது வரம்பு 40 ஆக நிர்ணயிக்கப்பட்டதால் 40 வயதுக்கு மேல் உள்ள ஆசிரியர் பணியை கனவாக நினைத்து காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளிக்கும் விதமாக அமைந்தது. இதனால் அரசால் வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்யக்கோரி புதுக்கோட்டை வல்லத்திரக் கோட்டையைச் சேர்ந்த எஸ்.தவமணி மற்றும் தேனி கீழவடகரையைச் சேர்ந்த எம்.பால முருகன், ஆகியோர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர்.


 மனுவில் தங்களுக்கு 48, 49 வயது நிரம்பியதால் எங்களால் ஆசிரியர் தேர்வு விண்ணப்பிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அரசு பாலிடெக்னிக், கலைக்கல்லூரி ஆசிரியர்கள் தேர்வுக்கு அதிகபட்ச வயது வரம்பாக 57 ஆக இருக்கும் போது, பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கு அதிகபட்ச வயதாக 45 நிர்ணயம் செய்திருப்பது சட்டவிரோதம். ஆகவே இத்தகைய அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டு வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.துரைசுவாமி, கே.முரளிசங்கர் அவர்கள் விசாரணைக்குப் பின்னர் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.










Post Top Ad