மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் கூடுதல் DA உயர்வு? சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்? - Asiriyar.Net

Post Top Ad

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, September 27, 2021

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் கூடுதல் DA உயர்வு? சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்?

 
மத்திய ஊழியர்களுக்கான 3 சதவீத கூடுதல் DA எப்போது வழங்கப்படும் என்று அனைவரும் கேள்விகளை எழுப்பிய வண்ணம் இருக்கின்றனர். இந்த DA உயர்வின் மூலமாக 48 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் 65 லட்ச ஓய்வூதியர்கள் பயன் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


DA உயர்வு


அரசு துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு பல சலுகைகளை வழங்கி வருகிறது. அதில் ஒன்று DA உயர்வு.இது ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து ஊழியர்களின் நலன் கருதி உயர்த்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது 28 சதவீத சம்பளம் வழங்கப்பட்டு வருகின்றது. இதனை தொடர்ந்து மேலும் 3 சதவீதம் எப்போது உயர்த்தப்படும் என்று ஊழியர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இதன் மூலமாக நாட்டில் உள்ள 48 லட்ச மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 45 லட்ச ஓய்வூதியர்கள்பயன்பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.


அரசு ஊழியர்களுக்கு இந்த உயர்வு வழங்கப்பட்டால் மொத்தமாக 31 சதவீதமாக DA உயர்த்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. விழா காலம் வர இருப்பதால் அரசு பணியாளர்களுக்கு இந்த DA உயர்வு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது வழங்கப்பட்டு வரும் 28 சதவீத உயர்வு மாதம் முதல் அமலில் இருந்து வருகிறது.


மத்திய அரசினை தொடர்ந்து ஜார்கண்ட், ஜம்மு & காஷ்மீர் உட்பட பல மாநிலங்கள் தங்களது அரசு ஊழியர்களுக்கான DAவை உயர்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. அனைத்தும் 11 சதவீதம் அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Post Top Ad