உங்க காரை விற்கப் போறீங்களா? இதெல்லாம் கட்டாயம் தெரிஞ்சுக்கணும்! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, January 28, 2021

உங்க காரை விற்கப் போறீங்களா? இதெல்லாம் கட்டாயம் தெரிஞ்சுக்கணும்!

 


யாரிடம் விற்பனை செய்வது? எப்படி விற்பனை செய்வது?


உங்களது காரை இன்னொரு பார்ட்டிக்கு விற்பனை செய்வதற்கு முன்னர் இந்த அம்சங்கள் எல்லாம் அவசியம் இருக்க வேண்டும். இவற்றைப் பார்த்து விற்பனை செய்தால் உங்களால் நல்ல விலைக்கு விற்பனை செய்ய முடியும்.






காரின் மதிப்பு!


உங்களிடம் உள்ள காரை விற்பனை செய்யும் சமயத்தில் அதன் சந்தை மதிப்பு என்ன என்பதைத் தெரிந்துவைத்திருக்க வேண்டும். ஆன்லைன் மூலமாகவும் ஆலோசகர்கள் மூலமாகவும் நீங்கள் இதுகுறித்து தெரிந்துகொள்ள முடியும். காரின் காப்பீட்டு மதிப்பு, சந்தை விலை போன்றவற்றைத் தெரிந்துகொண்டு விற்பனை செய்தால் நல்ல விலைக்கு விற்பனை செய்ய முடியும்.


தயார் நிலையில் கார்!


கரை விற்பனை செய்யும் சமயத்தில் அது நல்ல கண்டிஷனில் இருப்பது அவசியம். அந்தக் காரைப் பார்த்து வாங்கும் நபர்கள் அது எந்த நிலையில் உள்ளது, சாலையில் ஓடும்போது ஏதெனும் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதா என்றெல்லாம் பார்த்து வாங்குவார்கள். எனவே உங்களது காரில் உள்ள சிறு சிறு கோளாறுகளையும் சரிசெய்து தயார் நிலையில் வைக்க வேண்டும்.



பேப்பர் ஒர்க்!


வாகனத்துக்குரிய அனைத்து வாகனங்களும் சரியாக வைத்திருக்க வேண்டும். ஏதேனும் ஆவணம் காலாவதி ஆகியிருந்தால் அது வாங்கும் நபர்களிடையே தயக்கத்தை ஏற்படுத்தும். தற்போது வரை ஓடிக்கொண்டிருக்கும் என்பதை நிரூபிப்பதற்கு அனைத்து ஆவணங்கள் தற்போதைய கால நிலையில் காலாவதி ஆகாமல் இருப்பது அவசியம். ஆர்டிஓ, என்.ஓ.சி., ஆர்.சி., புகை மாசு சான்றிதழ் போன்றவை கட்டாயம்.






ஆய்வறிக்கை!


காரை விற்பனை செய்பவர்களின் காரின் அனைத்து அம்சங்களும் எவ்வாறு உள்ளன என்பதை ஆய்வு செய்து ஆம்/இல்லை போன்ற அறிக்கையை தயாராக வைத்திருக்க வேண்டும். காரை வாங்குபவர்கள் அதைப் பார்க்கும்போது இதெல்லாம் இல்லை, இதெல்லாம் உள்ளது என்று பார்த்து வாங்குவதற்கு எளிதாக இருக்கும். உதாரணமாக காரின் ஓனர்கள் எத்தனை பேர் போன்ற விவரங்கள் இருந்தால் வசதியாக இருக்கும். அதாவது, வாகன விற்பனையில் வெளிப்படைத்தன்மை அவசியம்.



எப்படி விற்பனை செய்வது?


காரை விற்பனை செய்ய முடிவு செய்த பிறகு, அதை ஆன்லைன் மூலமாக விற்பனை செய்வதா அல்லது நேரடி முறையில் விற்பனை செய்வதா, கார் டிரேடர் மூலமாக விற்பனை செய்வதா என்பதைத் தீர்மானிக்க வேண்டும். ஆன்லைன் மூலமாக விற்பனை செய்வது சிறந்த தேர்வாக இருக்கும். இதில் இடைத்தரகு போன்ற கூடுதல் செலவுகளைத் தவிர்க்கலாம்.

Post Top Ad