800 ஆண்டுகளுக்கு பிறகு வானில் நிகழப்போகும் அதிசயம் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, December 11, 2020

800 ஆண்டுகளுக்கு பிறகு வானில் நிகழப்போகும் அதிசயம்

 



சூரிய குடும்பத்தில் மிகப்பெரிய இரண்டு கிரகங்களாக இருப்பது வியாழன் மற்றும் சனி.இந்த இரண்டு கிரகங்களும் ஒன்றுடன் ஒன்று நெருங்கும் போது பெரிய நட்சத்திரம் போல ஒளி தோன்றும்.இது கிறிஸ்துமஸ் நட்சத்திரம் என்று அழைக்கப்படுகிறது.






800 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வானில் தெரியும்.இந்த நட்சத்திரம் வரும் டிசம்பர் 21-ம் தேதி ஏற்பட உள்ளதாக வானியல் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.அந்த நாள் நீண்ட இரவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



வியாழனும்,சனியும் 20 வருடத்திற்கு ஒரு முறை சந்திக்கும் என்றாலும்.இந்த நட்சத்திரம் 800 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே வானில் தெரியும்.இறுதியாக கடந்த 1226ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் நட்சத்திரம் தோன்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

Post Top Ad