ஞாபகமறதி பிரச்சனையை தீர்க்க ஒரு சில டிப்ஸ்.! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, March 25, 2021

ஞாபகமறதி பிரச்சனையை தீர்க்க ஒரு சில டிப்ஸ்.!






ஞாபகமறதியை தீர்க்க சில எளிய வழிமுறைகள்..

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகமாக இருக்கும் பிரச்சனைகளில் முக்கியமானது ஞாபகசக்தி.இந்த ஞாபக சக்தியை நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகள் மூலம் கண்டிப்பாக அதிகரிக்க முடியும்.


ஞாபக சக்தியை அதிகரிப்பதில் வல்லாரைக்கீரை முக்கிய பங்கு உண்டு.மூளையில் உள்ள செல்களை வளர்க்கும் ஆற்றல் வல்லாரைக்கு உண்டு.வல்லாரைக் கீரையை பருப்புடன் சேர்த்து கடைந்து சாப்பிடலாம்,துவையலாக சாப்பிடலாம்,ஜூஸாக சாப்பிடலாம். இவ்வாறு செய்தோம் ஆனால் ஞாபக சக்தி வளரும்.
கேரட் சாறு,பால்,தேன் இவை மூன்றையும் சம அளவு எடுத்து குடித்து வந்தால் ஞாபக சக்தி நன்றாக வளரும்.
லவங்கப்பட்டை,சுக்கு இரண்டையும் பொடி செய்து தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து கஷாயம் தயாரித்து காலை,மாலை இரு வேளைகள் குடித்து வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.
ஒரு டம்ளர் தண்ணீரில் கொஞ்சம் துளசி இலையைப் இரவில் போட்டு வைத்து காலையில் எழுந்ததும் அந்த தண்ணீரை மட்டும் குடித்து வந்தால் மூளை பலம் பெருகும் ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.
பாதாம் பருப்பில் பாஸ்பரஸ்,தாது உப்பு இருக்கிறது.இது நினைவாற்றலை அதிகரித்துக்கொள்ளவும்,நரம்புகளைப் பலப்படுத்திக்கொள்ளவும் உதவுகிறது.எனவே தினமும் இரவில் பன்னிரண்டு பாதாம் பருப்புகளைத் தண்ணீரில் ஊறபோட்டு காலையில் அதை அரைத்து சாப்பிட வேண்டும்.அரைக்கும் முன் பாதாம் பருப்பின் மேல் தோலை நீக்கிவிட வேண்டும் இவ்வாறு செய்தோம் ஆனால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.
ஞாபக சக்தியை அதிகரிப்பதில் அக்ரூட்டுக்கு மிக முக்கிய இடம் உண்டு.அக்ரூட் பருப்புகளுடன் உலர்ந்த திராட்சைப் பழத்தை தினமும் ஒருவேளை சாப்பிட்டு வந்தால் பலமில்லாத மூளை வலுப்பெற்று நினைவாற்றல் அதிகரிக்கும்.
வேர்க்கடலை சாப்பிட்டாலும் நினைவாற்றல் அதிகரிக்கும்.
பசலைக்கீரையை வாரம் ஒரு நாள் உணவில் சேர்த்து வர நினைவாற்றல் அதிகரிக்கும்.

செம்பருத்திப் பூவில் உள்ள மகரந்தத்தை நீக்கிவிட்டு சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.மூளைக்கும் பலம் கூடும் குழந்தைகளின் உணவில் நெல்லிக்காய் சாற்றினைக் கொடுத்து வந்தால் வளரும் குழந்தைகள் தேக ஆரோக்கியத்துடன் திகழ்வார்கள்.
மாணவர்கள் நெல்லிக்காய் சாப்பிடும்பொழுது நினைவாற்றல் அதிகரிக்கும்.கண்பார்வை தெளிவாகும்,புத்திக்கூர்மையை ஏற்படுத்தும் மூளையை சுறுசுறுப்பாக வைப்பதில் வெண்டைக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது.இதில் உள்ள உயர்தரமான பாஸ்பரஸ் புத்திக் கூர்மையை அதிகரிக்கச் செய்வதோடு நினைவாற்றலையும் அதிகப்படுத்தும்.

Post Top Ad