ஜனவரி 6ல் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம்
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜன.6ஆம் தேதி தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது
ஜனவரி 20 ஆம் தேதி சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கும் நிலையில், முக்கிய ஆலோசனை நடத்த அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.
ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்தும் பட்ஜெட் தாக்கல் உள்ளிட்டவை தொடர்பாகவும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள் கோரிக்கை தொடர்பாகவும் ஆலோசிக்கப்படவுள்ளது.

No comments:
Post a Comment