S.I.R - வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த கணக்கீட்டு படிவத்தை பூர்த்தி செய்யும் முறை - Asiriyar.Net

Wednesday, November 12, 2025

S.I.R - வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த கணக்கீட்டு படிவத்தை பூர்த்தி செய்யும் முறை

 




தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த கணக்கீட்டு படிவத்தை பூர்த்தி செய்யும் முறை..


1) வலது பக்க மேல் மூலையில் புதிய புகைப்படம் ஒட்ட வேண்டும் 


2) வாக்காளரின் விபரம், பெற்றோர் மற்றும் வாழ்க்கைத் துணைவர் விபரங்களை எழுத வேண்டும்.


3) வாக்காளருக்கு 2002-2005 இல் நடந்த (SIR) சிறப்பு திருத்த பட்டியலிலும் பெயர் இருந்தால் அதன் விபரங்களை எழுத வேண்டும்.


4) வாக்காளருக்கு 2002-2005 (SIR) சிறப்பு திருத்த பட்டியலில் பெயர் இல்லை எனில் அந்த பட்டியலில் இடம் பெற்ற அவரது தந்தை, தாயார், தாத்தா, பாட்டி ஆகியோரில் ஒருவரது விபரத்தை எழுத வேண்டும்.


5) தனக்கோ, தன் குடும்பத்தினருக்கோ 2002-2005 சிறப்பு திருத்தப் பட்டியலில் பெயர் இல்லாத பட்சத்தில் கீழே உள்ள இரு கட்டங்களிலும் இல்லை என எழுதி விட்டு தேர்தல் ஆணையம் கேட்கும் ஆவணங்களை இணைத்து BLO அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.


* 2002-2005 சிறப்பு திருத்த பட்டியலில் பெயர் உள்ளதா என கண்டறிவதற்குரிய இணைய முகவரி:


https://erolls.tn.gov.in/electoralsearch/


* 2002-2005 சிறப்பு திருத்த வாக்காளர் பட்டியலை தரவிறக்கம் செய்வதற்குரிய இணைய முகவரி:


https://old.eci.gov.in/electoral-roll/link-to-pdf-e-roll/


* ஆன்லைன் மூலமே  SIR கணக்கீட்டு படிவத்தை பூர்த்தி செய்வதற்குரிய இணைய முகவரி:


https://voters.eci.gov.in/signup


நமது வாக்கு! நமது உரிமை!

இன்றே அதை உறுதி செய்வோம்!



No comments:

Post a Comment

Post Top Ad