"ஏன்? எதற்கு? எப்படி?" என்ற தலைப்பில் 8 பிரிவுகளில் விழிப்புணர்வுப் போட்டிகள்
சமூக வலைத்தளங்களில் புற்றீசல்போல் பரவி சமூகத்தைப் புற்றுநோய்போல் சீரழித்து வரும் வதந்திகளையும், அதன் வாயிலாக உருவாக்கப்படும் வெறுப்புப் பரப்புரைகள், மூட நம்பிக்கைகள், அறிவியலுக்குப் புறம்பான தகவலைப் பகுத்தறிந்து தெளிவை ஏற்படுத்தும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ஊடக மையத்துடன் இணைந்து, தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம், "ஏன்? எதற்கு? எப்படி?" என்ற தலைப்பில் 8 பிரிவுகளில் பல்வேறு தலைப்புகளின் கீழ் விழிப்புணர்வுப் போட்டிகளை நடத்தவுள்ளது.
பின்வரும் கியூ ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து போட்டி குறித்த முழு விபரத்தை அறிந்து கொள்ளலாம். அனுப்ப வேண்டிய கடைசி நாள் : 31.10.2025
No comments:
Post a Comment