SMC குழு உறுப்பினர்களுக்குப் பயிற்சி வழங்குதல் மற்றும் நிதி விடுவித்தல் - SPD Proceedings - Asiriyar.Net

Monday, July 14, 2025

SMC குழு உறுப்பினர்களுக்குப் பயிற்சி வழங்குதல் மற்றும் நிதி விடுவித்தல் - SPD Proceedings

 




ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி பள்ளி மேலாண்மைக் குழு ஆற்றல்படுத்துதல் கல்வியாண்டு 2025-2026 - தேர்ந்தெடுக்கப்பட்ட 1878 பள்ளிகளின் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்குப் பயிற்சி வழங்குதல் மற்றும் நிதி விடுவித்தல்


 அரசு தொடக்க , நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பானது 2024 ஆகஸ்ட் மாதம் முதல் நான்கு கட்டங்களாக நடத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது . பார்வை -2 இன்படி , பள்ளி மேலாண்மைக் குழுக்களை ஆற்றல் படுத்துவது சார்ந்து முதற்கட்டமாக 3812 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அப்பள்ளிகளின் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு தொடர் பயிற்சிகள் வழங்குவது குறித்த விரிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது.


3812 பள்ளிகளில் இரண்டு விதமான பயிற்சி உத்திகள் கையாளும் வகையில் 1934 பள்ளிகள் ஒரு குழுவாகவும் ( Part A ) மீதமுள்ள 1878 பள்ளிகள் மற்றொரு குழுவாகவும் ( Part ) வகைப்படுத்தப்பட்டு தொடர்பயிற்சிகள் நடத்திட திட்டமிடப்பட்டு வருகிறது.


பள்ளி மேலாண்மைக் குழுக்கள் சிறப்பாகச் செயல்படவும் , பெற்றோர் செயலி வழியாக பள்ளியின் முக்கியத் தேவைகளை அறிந்து தீர்மானங்களை உள்ளீடு செய்து தேவைகள் பெற ஏதுவாக உறுப்பினர்களுக்குப் பயிற்சி அவசியமாகிறது.


இணைப்பு 1 இல் கொடுக்கப்பட்டுள்ள குழு B யினை சேர்ந்த 1878 அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் பள்ளி மேலாண்மைக் குழு



Click Here to Download - Training For Newly Selected SMC Members - SPD Proceedings - Pdf



No comments:

Post a Comment

Post Top Ad