வெள்ளம் பாதித்த பகுதிகளில் அரையாண்டுத் தேர்வு ஒத்திவைப்பு - அமைச்சர் மகேஷ் அறிவிப்பு - Asiriyar.Net

Wednesday, December 4, 2024

வெள்ளம் பாதித்த பகுதிகளில் அரையாண்டுத் தேர்வு ஒத்திவைப்பு - அமைச்சர் மகேஷ் அறிவிப்பு

 



வெள்ளம் பாதித்த பகுதிகளில் அரையாண்டுத் தேர்வு எழுத முடியாத நிலை இருந்தால் ஜனவரியில் தேர்வு நடத்தப்படும் என்று அமைச்சர் மகேஷ் கூறி உள்ளார்.


தமிழகத்தில் பெரும் சேதாரத்தை பெஞ்சல் புயல்,மழை ஏற்படுத்தி இருக்கிறது. கடலோர மற்றும் வட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பல பகுதிகளில் குடியிருப்புகள், உடமைகள் நீரில் மூழ்கியதால் பள்ளி மாணவர்களின் பாடப்புத்தகங்கள் சேதம் அடைந்தன.


இந் நிலையில், வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் டிச.9ம் தேதிக்குள் நிலைமை சீராகாவிட்டால் ஜனவரியில் அரையாண்டுத் தேர்வு நடத்தப்படும் என்று அமைச்சர் மகேஷ் கூறி உள்ளார். சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது;


வெள்ளம் பாதித்த பகுதிகளில் டிசம்பர் 9ம் தேதிக்குள் நிலைமை சீராகவில்லை என்றால் அங்குள்ள பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு ஜனவரி முதல் வாரத்தில் எழுத அறிவுறுத்தி இருக்கிறோம். இது குறித்து சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்வார்கள். மற்ற இடங்களில் அரையாண்டுத் தேர்வுகள் டிச.9ம் தேதி முதல் நடைபெறும்.


இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment

Post Top Ad