நேற்று 30.05.2024 தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் (ஒரு சில மாவட்டங்களை தவிர) சிறுபான்மை அல்லாத உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு நடந்து முடிந்திருக்கிறது.*
*சிறுபான்மை பள்ளிகளில் கல்வித் துறையின் குறுக்கீடு இல்லாமல் பள்ளி நிர்வாகத்துக்கு உள்ளாகவே பேசி முடிக்கப்பட்டு பணி நிரவல் நடைபெற்று உள்ளது.*
*சிறுபான்மையற்ற பள்ளிகளில் நடைபெற்ற நிரவலில் இரண்டு வகையான சூழல் ஏற்பட்டுள்ளது.*
*முதல் சூழல்: காலி பணியிடம் அதிகமாகவும் உபரி ஆசிரியர்கள் குறைவாகவும் உள்ள மாவட்டங்களில் பணிநிரவல் மாவட்டத்திற்கு உள்ளாகவே நடந்து முடிந்துள்ளது. இருப்பினும் சில ஆசிரியர்களுக்கு மாவட்டத்தின் ஒரு எல்லையில் இருந்து மற்றொரு எல்லையில் உள்ள பள்ளிகளுக்கு சுமார் 30 கிலோமீட்டர் வித்தியாசத்தில் பணி நிரவல் பணியிடம் கிடைத்துள்ளது.*
*சூழல் இரண்டு:*
*உபரி ஆசிரியர்கள் அதிகமாகவும் காலிப்பணியிடம் குறைவாக உள்ள மாவட்டங்களில் பணியில் சேர்ந்த ஆண்டை கணக்கிட்டு உபரி ஆசிரியர்களுக்கான முன்னுரிமை பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களில் மூத்தவருக்கு மாவட்டத்திற்கு உள்ளாக உள்ள காலிப் பணியிடத்தில் பணி நிரவல் ஆணை வழங்கப்பட்டுள்ளது.*
*மாவட்டத்திற்கு உள்ளே இடம் கிடைக்காத உபரி ஆசிரியர்களை என்ன செய்வது என்பது பற்றி பள்ளிக்கல்வித் துறை இன்று அல்லது நாளை முடிவு எடுக்கும் என்று தெரிய வருகிறது.*
*மற்ற மாவட்டங்களுக்கு அனுப்புவதா? அல்லது அதே மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாற்றுப் பணிகள் அனுப்புவதா என்பது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment