மாநில சீனியாரிட்டி - தொடக்கக் கல்வித்துறை நீதிமன்றம் சார்ந்த கருத்து - ஆசிரியர் மிகாவேல் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, January 9, 2024

மாநில சீனியாரிட்டி - தொடக்கக் கல்வித்துறை நீதிமன்றம் சார்ந்த கருத்து - ஆசிரியர் மிகாவேல்

 

மாநில சீனியாரிட்டி - தொடக்கக் கல்வித்துறை நீதிமன்றம் சார்ந்த கருத்து 

 ஆ. மிகாவேல் ஆசிரியர் மணப்பாறை .


* WP MD No 9424/ 2016 வழக்கில் 07.11.2022 நாளிட்ட தீர்ப்பில் அரசுக்கு 2 வழிகாட்டுதலை நீதிமன்றம் வழங்கியது 


1. இளையோர் மூத்தோர் ஊதிய முரண்பாடு சார்ந்து பல வழக்குகள் தொடரபடுவதனால் Joint Director தலைமையில் One Man Commission அமைக்கப்பட வேண்டும் 


2. மாநில சீனியாரிட்டி  Policy முடிவு எடுக்க Consider செய்ய வேண்டும் .Atleast மாவட்ட சீனியாரிட்டி முடிவு எடுக்க Consider என நீதிமன்றம் தெரிவித்தது . 


*** WP MD N0 6722 / 2017 வழக்கின் 8.11.2022 வழக்கின் தீர்ப்பில் இளையோர் மூத்தோர் ஊதிய முரண்பாட்டை களைய One Man commission அமைக்க நீதிமன்றம் வழி காட்டுதல் வழங்கியது. மாநில சீனியாரிட்டி பற்றி இந்த வழக்கின் தீர்ப்பில் கூறப்படவில்லை


**தனிப்பட்ட முறையில் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் One Man Commision அமைத்தால் போதும் என்று அரசுக்கு நான் முறையீடு செய்து இருந்தேன். அந்த மனுவின் நகலை சமூக ஊடகத்திலும் , கல்விசார்ந்த இணைய தளங்களிலும் பதிவிட்டு இருந்தேன் .


**நீதிமன்ற வழிகாட்டுதல்படி தொடக்கக் கல்வி சங்கங்கள் One Man Commision அமைக்க வழியுறுத்தி இருக்க வேண்டும் .


**அரசு நீதிமன்றம் வழங்கிய இரண்டு வழிகாட்டுதலில் ஒன்றை மட்டும் எடுத்து மாநில சீனியாரிட்டியை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது .


** பட்டதாரி ஆசிரியர்கள் உரிய பதவி உயர்வு இன்றி பணி நிறைவு பெற்றது சார்ந்து விரிவான பதிவை சமூக ஊடகத்தில் கடந்த ஆண்டு பதிவு செய்துள்ளேன் .நம்மோடு பணியாற்றிய பட்டதாரி ஆசிரியர்கள் எந்த பதவி உயர்வு இன்றி பணியாற்றி வந்தவர்களுக்கு நாம் விகிதாச்சாரம் பெற்றுக் கொடுத்து இருக்க வேண்டும் .பட்டதாரி ஆசிரியர்களை கண்டு கொள்ளாமல் விட்டதன் விளைவை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும் .


** பட்டதாரி ஆசிரியர்கள் சார்பில் திரு தியாகராஜன் மாநிலத் தலைவர் Tamilnadu Asiriyar Munnetra Sangam, திரு பேட்ரிக் ரெய்மாண்ட் மாநில பொதுச் செயலாளர் Tamilnadu pattathari Asiriyar Kootamaippu, திருவேல்முருகன் Tamilnadu NadunilaiPalli Pattathari asiriyar Sangam , திரு கணேசன் Tamilnadu Nadunilai Palli Pattathari asiriyar Kootamaipu மற்றும் 20 தனி ஆசிரியர்கள் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கோரி நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி உள்ளனர். பட்டதாரி ஆசிரியர் அமைப்புகள் வலியான  வாழும் என்ற பரிணாம தேற்றத்தின் படி தொடர் போராட்டம் மூலம் தங்களுக்கான உரிமையை பெற்றுள்ளனர் .


**மாநில சீனியாரிட்டி கோரி நண்பர் திரு ஸ்டனிஸ் ரத்தினம் முயற்சியால் WPMD N0 198 /2022 வழக்கு தொடரப் Uட்டுள்ளது .இந்த வழக்கில் திரு B .முத்து உட்பட 20 ஆசிரியர்கள் தொடர்ந்து உள்ளனர் .


*** மாநில சீனியாரிட்டி அரசாணை 243 


நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பட்டியல் வெளியீடோடு நடைமுறைக்கு வந்து விட்டது . முதல் ஆசிரியராக சென்று கையெழுத்து இட்டுள்ளனர் .


** மாநில சீனியாரிட்டு   எதிராக தொடக்கப் பள்ளி ஆசிரியர் சங்கங்கள் போராட ஆயத்தம் 


* * மாநில சீனியாரிட்டியை ரத்து செய்தல் என்பது எளிதானல்ல . ரத்து செய்யும் முடிவை எடுத்தால் மதுரை உயர் நீதிமன்ற இரு நபர் அமர்வு முன்பாக நிலுவையில் உள்ள WP MD 198 /2022 மூலம் உடனே நீதிமன்றம் மூலம் விரைவில் தீர்ப்பு பெறுவார்கள் .


*** விகிதாச்சார முறையில் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு என்று விதியை மாற்றாமல் இடைநிலை ஆசிரியர்களுக்கு நேரடியாக Uட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்க விதியை மாற்ற முடியாது .அப்படி வழங்கினால் இளையோரான இடைநிலை ஆசிரியர்    மூத்தோர் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியரை விட மூத்தோராக மாறுவார் .


*வலியான வாழும் எல்லா காலத்திற்கும் ஏற்றது . தொடர் போராட்டம் வழியாக அவரவர் உரிமையை அவரவர் தக்கவைத்து கொள்ள முடியும் .


* எது தேவையோ அதுவே தர்மம் - அர்த்த சாஸ்திரம் ..


ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் .....மாறாத உண்மை 


ஆ. மிகாவேல் ஆசிரியர் ,

மணப்பாறை

9047191706


Post Top Ad