காலாண்டு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவருக்கு ’ஒரு நாள் பள்ளி தலைமை ஆசிரியர்’ பொறுப்பு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, October 8, 2023

காலாண்டு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவருக்கு ’ஒரு நாள் பள்ளி தலைமை ஆசிரியர்’ பொறுப்பு

 நடந்து முடிந்த காலாண்டு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற தர்ஷன் மற்றும் இரண்டாவது மதிப்பெண் பெற்ற கவின்ராஜ் இருவரையும் தலைமை ஆசிரியர் மற்றும் சக ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.


பொள்ளாச்சி அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில் காலாண்டு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவருக்கு ’ஒரு நாள் பள்ளி தலைமை ஆசிரியர்’ பொறுப்பு வழங்கி கவுரவிக்கப்பட்டது.


பொள்ளாச்சி அடுத்துள்ள மாக்கினாம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் காலாண்டு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற பத்தாம் வகுப்பைச் சேர்ந்த மாணவர் தர்ஷனை தலைமை ஆசிரியர் பாராட்டி ஒரு நாள் பள்ளி தலைமை ஆசிரியராக இருக்கையில் அமர வைத்தார்.


பொள்ளாச்சி அடுத்துள்ள மாக்கினாம்பட்டி ஊராட்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 6 முதல் பத்தாம் வகுப்பு வரை 276 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.


இந்நிலையில், காலாண்டு தேர்வில் முதல் மதிப்பெண் பெரும் மாணவர் ஒருநாள் பள்ளி தலைமை ஆசிரியராகவும், இரண்டாவது மதிப்பெண் பெரும் மாணவர் உதவி தலைமை ஆசிரியராகவும் பொறுப்பு வழங்கப்படும் என பள்ளியின் தலைமை ஆசிரியர் ஹரிகிருஷ்ணன், மாணவர்களிடம் தெரிவித்திருந்தார்.அதன்படி நடந்து முடிந்த காலாண்டு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற தர்ஷன் மற்றும் இரண்டாவது மதிப்பெண் பெற்ற கவின்ராஜ் இருவரையும் தலைமை ஆசிரியர் மற்றும் சக ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.  


முதல் மதிப்பெண் பெற்ற தர்ஷனுக்கு சால்வை அணிவித்து தலைமை ஆசிரியர் இருக்கையில் அமர வைத்தும், இரண்டாவது மதிப்பெண் பெற்ற கவின்ராஜையும் உதவி தலைமை ஆசிரியர் இருக்கையில் அமர வைத்தும், ஒரு நாள் பொறுப்புகளை இரு மாணவர்களுக்கும் தலைமை ஆசிரியர் ஹரிகிருஷ்ணன் வழங்கினார்.பள்ளி மாணவ மாணவிகள் இடையே கல்வி ஆர்வத்தையும் ஊக்கத்தையும் ஏற்படுத்தும் விதமாக பள்ளி தலைமை ஆசிரியர் ஹரி கிருஷ்ணன் யோசனையானது  மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதனால் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் நன்றாக படிக்கவும் முதல் மதிப்பெண் எடுக்கும் ஆர்வம் காட்டுவார்கள்.


இதேபோல் மற்ற அரசு பள்ளிகளிலும் நடந்தால் எங்களைப் போன்ற மாணவர்களிடையே, மேலும் கல்வியை கற்க ஆர்வமும் ஊக்கமும் ஏற்படும் என மாணவ மாணவிகள் தெரிவித்தனர்.


குறிப்பாக  கடந்தாண்டு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்றதை விட நடப்பாண்டில் மாநில அளவில் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற வேண்டும் என ஊக்கத்தை அளித்து கல்வியை கற்பித்து வருகிறோம், அதனால்  மாணவர்களும் ஆர்வமுடன் கல்வியை கற்பித்து வருகின்றனர் பள்ளி தலைமையாசிரியர் தெரிவித்துள்ளார்.Post Top Ad