Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Tuesday, March 15, 2022

தேர்வில் காப்பி - ஆசிரியர் கண்டித்ததால் பள்ளி மாணவர் தற்கொலை

 


தேர்வில் காப்பி அடித்ததை ஆசிரியர் கண்டித்ததால் வேதனை அடைந்த பிளஸ் 1 மாணவர், மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். உடுமலை அருகே இந்த பரிதாபம் நடந்துள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே அரசு உதவிபெறும் தனியார் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் பிளஸ் 1 படித்துவரும் கலைச்செல்வன் (16) என்ற மாணவர் நேற்று வகுப்பு தேர்வின்போது காப்பி அடித்ததாக கூறப்படுகிறது. இதனை ஆசிரியர் கண்டித்துள்ளார்.


இதையடுத்து மாணவன் பள்ளியின் முதல் தளத்திற்கு சென்று அங்கிருந்து குதித்தார். ரத்த வெள்ளத்தில் கிடந்த மாணவரை சக மாணவர்களும், ஆசிரியர்களும் உடனடியாக மீட்டு மடத்துக்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். புகாரின்பேரில் கணியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



No comments:

Post a Comment

LightBlog