பள்ளிகளில் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு கவுன்சலிங் வழங்க அதிகாரிகளை நியமித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் சமீபகாலமாக, பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் சிலர் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக தேனி மாவட்டத்தில் ஒரு அரசுப் பள்ளி மாணவர் ஆசிரியரை மிரட்டும் தொனியில் பேசியுள்ளதும், ஒரு பள்ளியில், ஆசிரியரை சுற்றி மாணவர்கள் கை தட்டி கேலி செய்யும் நிகழ்வு பரவி பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற நிகழ்வுகள் கல்வி த்துறை அதிகாரிகளுக்கும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் ஒரு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில், ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் மாணவர்களால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் அதனால் மாணவர்கள் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடும்போது முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனால் மாவட்டவாரியாக அல்லது பள்ளிகள்தோறும் ஒரு கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட வேண்டும். அவர்கள் பள்ளி வாரியாக சென்று ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் யார் என்று அடையாளம் கண்டு அவர்களுக்கு கவுன்சலிங் அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அவர்கள் ஒழுங்கீனச் செயல்களில் இருந்து திருந்தி படிப்பில் கவனம் செலுத்த வசதியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது அனைத்து பள்ளிகளிலும் எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment