தலைமை ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை - Asiriyar.Net

Tuesday, March 29, 2022

தலைமை ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை

 




சமூக வலைதளங்களில் மாணவி ஒருவர் அவர் பயிலும் பள்ளியின் கழிவறையை சீருடையுடன் சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைகளில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்தப் பள்ளி காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஆலம்பாக்கம் அரசு உயர்நிலை பள்ளி என்பது தெரிய வந்தது. அந்த மாணவி தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும்  கூறப்படுகிறது. அந்த மாணவியை யாராவது கட்டாயப்படுத்தி கழிவறையை கழுவ சொன்னார்களா, அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் என்பது தெரியவில்லை.


அந்த மாணவி கழிப்பறையை கழுவும் காட்சிகளை யாரோ ஒருவர் வீடியோ எடுத்தது தெரிய வருகிறது. அந்த நபர் யார் என்பதும் தெரியவில்லை. இந்த காட்சி ஆலம்பாக்கம் கிராம மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.  எனவே தமிழக பள்ளிக்கல்வித்துறை இதனை விசாரணை மேற்கொண்டு இதில் ஏதேனும் உள்நோக்கம் இருந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.


இதுகுறித்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் புஷ்பவதி தொடர்புகொண்டு கேட்ட போது,  பள்ளியில் தூய்மை பணிகளை மேற்கொள்ள கிராம தூய்மை பணியாளர்கள் இருக்கிறார்கள். தினந்தோறும் அவர்கள் மூலம் பள்ளி வளாகம், கழிவறை அனைத்துமே தூய்மைபடுத்தப்படுகிறது. இந்நிலையில் மாணவியை எதற்காக கழிவறையை சுத்தம் செய்தார் என்பது குறித்து விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உள்நோக்கத்தோடு யாரோ ஒருவர் ஒரு விஷயத்தை கையாண்டு இருக்கிறார்கள் என்பது தெரிகிறது என்றார்.


காஞ்சிபுரம் ஆனம்பாக்கம் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை புஷ்பாவதி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 10ம் வகுப்பு மாணவி கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய விவகாரத்தில் ஆட்சியர் நடவடிக்கை  எடுத்துள்ளார்.


No comments:

Post a Comment

Post Top Ad