TEAM VISIT - EMIS ல் பள்ளிகள் தேர்வு. - Asiriyar.Net

Sunday, March 27, 2022

TEAM VISIT - EMIS ல் பள்ளிகள் தேர்வு.

 


மதுரையில் இயக்குநர், இணை இயக்குனர்கள் குழு ஆய்வு செய்வதற்கான பள்ளிகளை முதல்முறையாக எமிஸ் (பள்ளி மேலாண்மை தகவல் அமைப்பு)இணையதளத்தில் தேர்வு செய்யவுள்ளது.மதுரையில் மார்ச் 31ல் அமைச்சர் மகேஷ், செயலர் காக்கர்லா உஷா தலைமையில் மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் நடக்கிறது. இதையொட்டி மார்ச் 30ல் மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் கமிஷனர், இயக்குநர் குழு பள்ளிகளில் சிறப்பு ஆய்வு மேற்கொள்ளவுள்ளன. 


இதற்காக முதன்முறையாக எமிஸ் இணையதளத்தில் பள்ளிகள் தேர்வு செய்யப்படவுள்ளது. இதனால் எந்த பள்ளிக்கு குழு ஆய்வுக்கு வருமோ என்ற 'திக் திக்' மனநிலையில் ஆசிரியர்கள் உள்ளனர். கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: 


பள்ளிகளில் இயக்குநர் ஆய்வு என்பது இதுவரை சி.இ.ஓ.,கள் தேர்வு செய்யும் பட்டியலில் உள்ள பள்ளிகளை மட்டும் ஆய்வு செய்வர். ஆய்வு குறித்து முன்கூட்டியே சம்மந்தப்பட்ட பள்ளிகளுக்கு தகவல் சென்று விடும். அங்கு அதிகாரிகளுக்கு தடபுடல் வரவேற்பு அளிக்கப்படும். ஆனால் கமிஷனர் நந்தகுமார் உத்தரவால் இம்முறை எமிஸ் மூலம் பள்ளிகள் தேர்வு செய்யப்படவுள்ளது. மதுரையில் இயக்குநர் லதா, இணை இயக்குநர்கள் அமுதவல்லி, உமா குழு ஆய்வு செய்கிறது. ஆய்வுக்கு உட்படுத்தப்படும் ஆசிரியர் பெயரும் எமிஸ் மூலம் தேர்வு செய்யப்படுகிறது என்றார்.






No comments:

Post a Comment

Post Top Ad