மழையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு, மூன்று பாடங்களுக்கு ஆசிரியர் இல்லாததால் மாணவர்கள் அவதி அடைந்து, இதற்கு நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட கலெக்டரிடம்; மாணவர்கள் மனு அளித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், மழையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்2 வகுப்பில் வணிகவியல் பிரிவில் 45 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப்பாடப் பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கு ஆறு பாடங்கள் உள்ளது. கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக வணிகவியல் பிரிவில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு மூன்று பாடங்களுக்கு மட்டுமே ஆசிரியர்கள் உள்ளனர். மீதமுள்ள மூன்று பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லை. இதுவரை எந்தவிதமான வகுப்புகளும் நடத்தப்படவில்லை. இதனால், மாணவர்கள் பெரிதும் பாதிப்படைந்து உள்ளனர்.
தங்களுடைய நிலைமையை தலைமை ஆசிரியரிடம் எடுத்துக்கூறியும் கல்வித்துறை அதிகாரிகளிடம் எடுத்துக்கூறி அவர் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. தொடர்ந்து, பிளஸ்2 பொதுத்தேர்வு இன்னும் ஒரு மாதத்தில் தொடங்க உள்ளதால் மாணவர்கள் செய்வதறியாது திகைத்து நேற்று மாவட்ட கலெக்டர் கவிதாராமுவை சந்தித்து நேரில் மனு கொடுத்தனர். அந்த மனுவில் நாங்கள் ஒரு வருட காலமாக ஆசிரியர்கள் இல்லாததால் மூன்று பாடப்பிரிவுகளில் எந்தவிதமான வகுப்பும் நடத்தப்படவில்லை. அந்தப் பாடங்களில் இதுவரை ஒரு வகுப்பு கூட நடத்தவில்லை.
ஒரு மாதத்தில் பொதுத்தேர்வு வர உள்ளது. எங்களால் தேர்வை எப்படி எழுத முடியும் உடனடியாக மாற்று ஏற்பாடு செய்து கூடுதல் ஆசிரியர்களை நியமித்து தோடு கூடுதல் வகுப்புகளை நடத்தி பாடப்பிரிவுகளை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மழையூர் அரசுப் பள்ளி மாணவர்கள் அளித்த கோரிக்கை மனுவின் படி,மாவட்ட கலெக்டர் கவிதாராமு உடனடியாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமிசத்தியமூர்த்தியை அழைத்து இது குறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.முறையாக ஆசிரியர்களை நியமித்து, பிளஸ் மாணவர்கள் கல்வி கற்க ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளாத மழையூர் பள்ளி தலைமை ஆசிரியர் அரங்கசாமியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சஸ்பெண்ட் செய்தார்.
No comments:
Post a Comment