பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் முற்றிலும் தற்காலிகமானது - முதன்மைச் செயலாளர் விளக்கம்! - Asiriyar.Net

Sunday, March 27, 2022

பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் முற்றிலும் தற்காலிகமானது - முதன்மைச் செயலாளர் விளக்கம்!

 

பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் முற்றிலும் தற்காலிகமானது - ஒருபோதும் அரசு நியமனம் ஆகாது - மே மாத ஊதியம் வழங்கக் கோரிய மனுவிற்கு பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் விளக்கம்!


பகுதிநேர ஆசிரியர் பணியிடங்கள் நிரந்தரமானது அல்ல தற்காலிகமானதே என பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது. முன்னறிவிப்பின்றி எந்த நேரத்திலும் பணிநீக்கம் செய்யப்படலாம் எனவும் தெரிவித்துள்ளது. பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாதத்திற்கான சம்பளம் வழங்க இயலாது எனவும் கூறியுள்ளது.


தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியர்கள், தங்களுக்கு பணி நிரந்தரம் செய்யக்கோரி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் திருமதி காகர்லா உஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதற்கு வாய்ப்புகள் இல்லை. அந்த பணி முற்றிலும் தற்காலிகமானது என்பதை பணி நியமண ஆணையிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.


அவர்களது பணி தேவையில்லை என்று அரசு கருதினால், முன்னறிவிப்பின்றி எந்த நேரத்திலும் பணி நீக்கம் செய்யப்படலாம். பகுதி நேர ஆசிரியர்களுக்கான பணியிடங்கள் என்பது அரசு பணியிடங்கள் இல்லை. அந்த அடிப்படையில் அவர்களுக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை” என்று கூறப்பட்டுள்ளது.










No comments:

Post a Comment

Post Top Ad