போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேபோல் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ்.எஸ்.சிவசங்கர் போக்குவரத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கியதால் அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் இருந்து போக்குவரத்துறை மாற்றப்பட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை (பிற்படுத்தப்பட்டோர் நலன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சீர்மரபினர்) அமைச்சராக இருந்த எஸ் எஸ் சிவசங்கர் போக்குவரத்து துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment