ஐடிஐ படிக்கும் மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 உதவித்தொகை - அமைச்சர் அறிவிப்பு - Asiriyar.Net

Thursday, March 24, 2022

ஐடிஐ படிக்கும் மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 உதவித்தொகை - அமைச்சர் அறிவிப்பு

 




அரசுப்பள்ளிகளில் 10வது முடித்து ஐடிஐ சென்றாலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருக்கிறார். நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உரையாற்றி வருகிறார். அப்போது பேசிய அவர்,


பாலிடெக்னிக் மாணவிகளுக்கும் ரூ.1000 உதவித்தொகை:


அரசுப்பள்ளிகளில் 10ம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. செல்லும் மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும். அரசு பள்ளி மாணவிகள் 12ம் வகுப்பு முடித்துவிட்டு கல்லூரிகள் சென்றால் மாதம் ரூ.1000 என அறிவிக்கப்பட்டிருந்தது.




No comments:

Post a Comment

Post Top Ad