வரும் கல்வியாண்டில் இருந்து M.Phil படிப்பு முழுமையாக நீக்கப்படுவதாக யுஜிசி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
![]() |
வரும் கல்வியாண்டில் இருந்து நீக்கப்படுகிறது M.Phil., படிப்பு.
ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த M.Phil., பட்டம் செல்லும்.
கற்பித்தல் பணிக்கு M.Phil., தகுதியானது இல்லை என்பதால் படிப்பு நீக்கம்.
M.Phil., படித்திருந்தாலும் இனி அதை ஒரு தகுதியாக குறிப்பிட முடியாது.
2022-23 கல்வியாண்டிலிருந்து மாஸ்டர் ஆஃப் பிளாஷபி (MPhil) பட்டப்படிப்பை ரத்து செய்ய திட்டமிட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியக் குழு (UGC) தெரிவித்துள்ளது. இந்த புதிய விதிமுறைகள் குறித்த அறிவிக்கப்படும் வரை இதுவரை வழங்கப்பட்ட எம்ஃபில் பட்டம் செல்லுபடியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
UGC-யின் வழிகாட்டுதலின் படி, மெட்ராஷ் பல்கலைக்கழகம் உட்பட சில மாநிலப் பல்கலைக்கழகங்கள் கடந்த ஆண்டு MPhil படிப்பை நிறுத்திவிட்டன. இந்த நடவடிக்கையின் மீதான சலசலப்பைத் தொடர்ந்து, 2021-22 ஆம் ஆண்டில் அனைத்து மாநிலப் பல்கலைக்கழகங்களும் MPhil படிப்புக்கான சேர்க்கையை தொடரும் என்று TN அறிவித்தது. "புதிய விதிமுறைகள் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டவுடன், 2022-23 முதல் MPhil படிப்புக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்படும்" என்று சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் VC மற்றும் புதிய வழிகாட்டுதல்களை உருவாக்கிய UGC குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான P துரைசாமி தெரிவித்துள்ளார்.
Mphil 1977 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதுமட்டும் அல்லாமல், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர் பதவிக்கான நுழைவு நிலை தகுதியாக எம்ஃபில் கருதப்பட்டது. எம்ஃபில் பட்டம் பெறுவதற்கு ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை கிடைக்கும். “இருப்பினும், UGC ஆசிரியர் பணிகளுக்கான குறைந்தபட்ச தகுதியை மாற்றியுள்ளது. எம்ஃபில் எந்த ஆசிரியப் பதவிகளுக்கும் தகுதியற்றது மற்றும் அதன் பொருத்தத்தை இழந்துவிட்டது,” என்று துரைசாமி மேலும் கூறினார். எம்ஃபில் பட்டப்படிப்பை தேர்வு செய்வதால் எந்தப் பயனும் இல்லை என்றும் வேலை தேடுபவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், தமிழக அரசின் புதிய கல்வி கொள்கை மீதான எதிர்ப்பால், அரசு பல்கலைக்கழகங்களில் எம்.பில் படிப்பை நடத்தலாமா, வேண்டாமா என பல்கலைகள் குழப்பம் அடைந்திருந்தன. இந்த நிலையில், வரும் கல்வியாண்டில் இருந்து M.Phil படிப்பு முழுமையாக நீக்கப்படுகிறது என யுஜிசி அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. கற்பித்தல் பணிக்கு M.Phil., தகுதியானது இல்லை என்பதால், M.Phil., படித்திருந்தாலும் அதை ஒரு தகுதியாக குறிப்பிட முடியாது என்று தெரிவித்துள்ள UGC, ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த M.Phil பட்டங்கள் செல்லும் என்றும் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment