டெட்டில் தேர்ச்சி பெற்றும் ஆசிரியர் பணிக்கு செல்ல முடியாது - ஹிந்து தமிழ் செய்தி
தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வுக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்படாமல் இருந்தது. குறிப்பிட்ட கல்வித் தகுதி இருந்தால் , ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித் தேர்வு எழுதி , அரசுப் பள்ளியில் ஆசிரியராக சேரலாம். இந்நிலையில் , கடந்த அதிமுக ஆட்சியில் , முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு முதன்முத லாக வயதுவரம்பு கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது.
பொதுப் பிரிவினருக்கு 40 , எஸ்.சி. , எஸ் . டி . , பி.சி. , பி.சி. ( முஸ்லிம் ) , எம் . பி.சி. பிரிவினர் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு 45 என வயது நிர்ணயிக்கப்பட்டது.இந்த தேர்வுக்காக ஆன்லைன் விண்ணப்பப் பதிவு செப்டம்பர் 16 முதல் நடைபெற்று வருகிறது. வரும் 17 - ம் தேதிக்குள் விண்ணப் பிக்க வேண்டும்.
ஆசிரியர் பணிக்கு புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள வயது வரம்பு கட்டுப்பாட்டை நீக்கக் கோரி 40 வயதைக் கடந்த பி.எட் . பட்ட தாரிகள் போராட்டம் நடத்தியதுடன் , முதல்வர் , பள்ளிக்கல்வி அமைச்சரிடம் முறையிட்டுள்ளனர்.
மத்திய அரசின் இலவச கட் டாயக் கல்வி உரிமை சட்டப்படி , 1 முதல் 8 - ம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணியில் சேர ‘ டெட் ’ எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர் வில் தேர்ச்சி பெற வேண்டும். இதுவரை தமிழகத்தில் 5 முறை இத்தேர்வு நடத்தப்பட்டு , சுமார் 1.50 லட்சம் பி.எட் . பட்டதாரிகள் மற்றும் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் அரசுப் பணிக்காக காத்திருக்கிறார்கள். அவர்களில் சுமார் 50 ஆயிரம் பேர் , 40 வயதைக் கடந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் , டெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு போட்டித் தேர்வு நடத்தி , அதன் மூலம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.ஆசிரியர் தேர்வு வாரியத்தின் 2020-2021 - ம் ஆண்டுக்கான வருடாந் திர தேர்வு காலஅட்டவணையில் இந்த போட்டித் தேர்வு குறித்த அறிவிப்பு இடம்பெற்றுள்ளது. ஆனால் , கரோனா சூழல் காரணமாக அத்தேர்வு இதுவரை நடத்தப்படாமல் உள்ளது.
கடந்த 30.1.2020 அன்று வெளியிடப்பட்ட அரசாணையின்படிதான் , முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு வயது வரம்பு கொண்டு வரப்பட்டுள்ளது. அதே நடை முறையை இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்விலும் பின்பற்ற பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
' இதனால் , ' டெட் தேர்ச்சி பெற்று , 40 வயதைக் கடந்த பி.எட் . பட்ட தாரிகள் , இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் ஆகியோர் ஆசிரியர் பணியில் சேர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. வயது வரம்பு கட்டுப்பாடு காரணமாக , ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித் தேர்வுக்கு அவர்களால் விண்ணப்பிக்க இயலாது. டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் , புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள வயது வரம்பு விதிமுறை காரணமாக அரசுப் பள்ளி ஆசிரியர் கனவு நிறைவேறாமல் போய்விடுமோ என்று கலங்கி நிற்கின்றனர்.