G.O 144 - TRB - ஆசிரியர்களுக்கான நேரடி பணி நியமன வயது உச்ச வரம்பினை 5 ஆண்டுகள் உயர்த்தி அரசாணை வெளியீடு - Asiriyar.Net

Monday, October 18, 2021

G.O 144 - TRB - ஆசிரியர்களுக்கான நேரடி பணி நியமன வயது உச்ச வரம்பினை 5 ஆண்டுகள் உயர்த்தி அரசாணை வெளியீடு

 


TRB Age Relaxation Go No 144 Date:18.10.2021* 


தொடக்கக்கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறையில் நேரடி நியமனம் மூலம் நியமனம் செய்யப்படும் ஆசிரியர்களுக்கான வயது வரம்பினை உயர்த்தி அரசாணை வெளியீடு ...


பொதுப்பரிவினருக்கு 40 வயதிலிருந்து 45  வயதாகவும் , இதர பிரிவினருக்கு 45 வயதிலிருந்து 50 வயதாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது ...


இவ்வயது வரம்பு வரும் 31-12-2022 வரை மேற்கொள்ளப்படும் நியமனங்களுக்கு மட்டும் பொருந்தும் .


அரசாணை நிலை- எண்:144 நாள் 18.10.2021

தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணிகளுக்கான சிறப்பு விதிகள், தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப் பணிகளுக்கான சிறப்பு விதிகள் மற்றும் தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணிகளுக்கான சிறப்பு விதிகள் ஆகியவற்றில் முறையே வயது வரம்பிற்கான விதி எண்.6(a), 5(a) மற்றும் 6ல்  நிர்ணயிக்கப்பட்டுள்ள, ஆசிரியர் நேரடி நியமனம் தொடர்பாக உச்ச வயது வரம்பினை பொதுப் பிரிவினருக்கு 40-லிருந்து 45-ஆகவும், இதரப் பிரிவினருக்கு 45-லிருந்து 50- ஆகவும் உயர்த்தப்படுகிறது.


 ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 09.09.2021 அன்று வெளியிடப்பட்ட அறிவிக்கைக்கு இந்த உயர்த்தப்பட்ட உச்ச வயது வரம்புபொருந்தும்.


இவ்வாறு உயர்த்தப்படும் உச்ச வயது வரம்பினை 31.12.2022 வரை சிறப்பு நிகழ்வாக ஒரு முறை மட்டும் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த உயர்த்தப்பட்ட உச்ச வயது வரம்பு 31.12.2022 வரை வெளியிடப்படும் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள ஆசிரியர் பணி நியமனம் தொடர்பான அறிவிக்கைகளுக்கு பொருந்தும்.


அரசாணை நிலை) எண்91. மனிதவள மேலாண்மைத் (எஸ்) துறை, நாள் 13.09.2021ன்படி ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான உச்ச வயது வரம்பினை, 01.01.2023 முதல் பொதுப் பிரிவினருக்கு 42 ஆகவும், இதர பிரிவினருக்கு 47 ஆகவும் நிர்ணயிக்கப்படுகிறது.









Click Here To Download - TRB Age Relaxation - G.O 144 - Pdf



No comments:

Post a Comment

Post Top Ad