கொரோனா தடுப்பூசி முகாம் - ஆசிரியர்களுக்கு ஈடுசெய் விடுப்பு வழங்க உத்தரவு - CEO Proceedings - Asiriyar.Net

Monday, October 18, 2021

கொரோனா தடுப்பூசி முகாம் - ஆசிரியர்களுக்கு ஈடுசெய் விடுப்பு வழங்க உத்தரவு - CEO Proceedings

 


விடுமுறை நாட்களில் மெகா தடுப்பூசி முகாம்களில் பங்கேற்ற , பங்கேற்க உள்ள ஆசிரியர்களுக்கு ஈடுசெய் விடுப்பு வழங்குதல் - சார்பு -- முதன்மை கல்வி அலுவலர் செயல்முறைகள்


கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல் முறைகள்,

ஒ.மு.எண்.7880/84/2021 நாள். 07.102021 பொருள் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வி - கரூர் மாவட்டம் விடுமுறை நாட்களில்

மெகா தடுப்பூசி முகாம்களில் பங்கேற்ற பங்கேற்க உள்ள ஆசிரியர்களுக்கு - ஈடுசெய்யும் விடுப்பு வழங்குதல் - சார்பு

பார்வை

1. கரூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் கூட்ட நாள். 30.09.2021 2 அரசாணை எண்.223, பொதுத்துறை நாள். 14121981 3 கரூர், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளரின் கடித நான். 30.09.21

பார்வை 1 மற்றும் 2 ன் படி, கரூர் மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்று தடுப்பு முறையாக கொரோனா தடுப்பூசி மெகா முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

விடுமுறை நாட்களில் இம்மெகா முகாம்களில் பங்கேற்ற பங்கேற்க உள்ள ஆசிரியர்கள் அனைவருக்கும், ஈடுசெய் விடுப்பு வழங்க அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் ஆணையிடப்படுகிறது.





Post Top Ad