தொகுப்பூதியத்தில் 2,423 கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்கலாம் - தமிழக அரசு - Asiriyar.Net

Saturday, October 2, 2021

தொகுப்பூதியத்தில் 2,423 கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்கலாம் - தமிழக அரசு

 




நடப்பு கல்வியாண்டிற்கு தொகுப்பூதியத்தில், 2,423 கவுரவ விரிவுரையாளர்களை நியமனம் செய்வதற்கு அனுமதி அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: கல்லூரி கல்வி இயக்குநர் கடிதத்தில், கருத்துருவை அரசு கவனமாக பரிசீலனை செய்து, தற்போது உள்ள நிதி நெருக்கடி சூழலில், கூடுதல் கவுரவ விரிவுரையாளர்களை நியமனம் செய்ய அனுமதிக்க இயலாத நிலையில், 2021-22ம் கல்வியாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள காலிப் பணியிடங்களில் முறையான உதவிப் பேராசிரியர்கள் நியமனம் செய்யப்படும் வரை அல்லது கல்வியாண்டின் இறுதி நாள் வரை தற்காலிகமாக சுழற்சி-1ல் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள 2,423 கவுரவ விரிவுரையாளர்களை பணியமர்த்த அனுமதி வழங்கப்படுகிறது. அதற்கான செலவினமாக கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாத ஊதியமாக ரூ.20 ஆயிரம் வீதம் 5 மாதங்களுக்கு ரூ.24 கோடியே 23 லட்சம் ஒப்பளிப்பு செய்து அரசு ஆணையிடுகிறது.


No comments:

Post a Comment

Post Top Ad