திருச்சி மாவட்டம் அந்தநல்லூரில் உள்ள கடியா குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வருபவர் மதனா(51). 31 வருடங்களாக அரசு ஆசிரியராக பணி அனுபவம் கொண்ட இவர் ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில மகளிர் அணி தலைவியாக கடந்த 12 வருடங்களாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் முசிறி, ஸ்ரீரங்கம், குளித்தலை ஆகிய மூன்று தொகுதிகளில் திமுக சார்பில் போட்டியிடுவதற்கு விருப்ப மனு தாக்கல் செய்தவுடன் நேர்காணலும் சென்று வந்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில் நான் தேர்தலில் களமிறங்கி கட்சி பணியும், சமுதாயப் பணியும் ஆற்ற உள்ளேன். இதற்காக விருப்ப ஓய்வு கேட்டு பள்ளிக்கல்வித்துறைக்கு விண்ணப்பித்து விட்டதாகவும் கூறினார்.
No comments:
Post a Comment