இந்த அறிகுறிகள் வைத்து நுரையீரல் புற்றுநோயை முன்னரே அறிந்துவிடலாம் - Asiriyar.Net

Saturday, January 16, 2021

இந்த அறிகுறிகள் வைத்து நுரையீரல் புற்றுநோயை முன்னரே அறிந்துவிடலாம்

 






உலகில் பரவலாக காணப்படும் புற்றுநோய் வகைகளில் முக்கியமான ஒன்று நுரையீரல் புற்றுநோய்.


சுவாசத்தை பாதிக்கும் நுரையீரல் புற்றுநோய் ஏற்பட காற்றுமாசு முக்கிய காரணியாக இருக்கிறது.


90 சதவிகித நுரையீரல் புற்றுநோய் பாதிப்புகள் புகை பிடிப்பதால் ஏற்படுகின்றது. மேலும் காற்றுமாசு, சிகரெட் புகை, ரேடான் வாயு, மரபியல் ஆகியவை நுரையீரல் புற்றுநோய் ஏற்பட காரணமாக அமைகின்றன.


ஆரம்பக்கட்டத்தில் நுரையீரல் புற்றுநோயை கண்டறிவது கடினம். ஏனெனில், இதற்கான அறிகுறிகளை சாதாரண சுவாசத்தொற்று எனக் கருதி கடந்துவிடுவோம்.


சில சமயங்களில், அறிகுறிகள் ஏதும் தென்படுவது கிடையாது. புற்றுநோய் கட்டி வளர்ந்த பிறகோ அல்லது வியாதி முற்றிய பிறகோ தான் நுரையீரல் புற்றுநோய் பெரும்பாலான சமயங்களில் கண்டறியப்படுகிறது.




முன்கூட்டியே கண்டறிந்தால், நுரையீரல் புற்றுநோயை குணப்படுத்துவது சுலபம். இதனால், நுரையீரல் புற்றுநோய்க்கான அறிகுறிகளை அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.


இவை தான் நுரையீரல் புற்றுநோய் அறிகுறிகள்:


தீராத இருமல்

இருமலில் ரத்தம் வெளியேறுதல்

மூச்சுத்திணறல்

குரல் கரகரப்பு

அடிக்கடி ஜலதோஷம், காய்ச்சல்

நெஞ்சுவலி

உடல் எடை இழப்பு

பசியின்மை

தலைவலி


நுரையீரல் புற்றுநோய் கட்டி வளர்ந்தால் முதுகு, விலா எலும்பு மற்றும் இடுப்பு பகுதிகளில் எலும்பு வலி, மஞ்சள் காமாலை ஆகியவை ஏற்படும்.


மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.

No comments:

Post a Comment

Post Top Ad