தமிழகத்தில் மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. கொரோனா தொற்று குறைய தொடங்கியதால் பள்ளிகள் திறக்கப்படலாம் என்ற கருத்து நிலவி வருகிறது. அதேவேளையில் மாணவ - மாணவிகள் நலனை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பை தள்ளிப்போடலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.
கடந்த வாரம் கல்லூரிகள் திறக்கப்பட்டன. இந்த நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்த கேள்விக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ‘‘பள்ளிகளை இந்த மாதத்தில் திறக்க சாத்தியமில்லை. பள்ளிகளை திறப்பது குறித்து முதலமைச்சருடன் பேசி முடிவு எடுப்போம்’’ என்றார்.