டிச. 21ம் தேதி மாலை வானத்தை பாருங்கள்: 397 ஆண்டுக்குப் பிறகு அதிசயம். - Asiriyar.Net

Monday, December 7, 2020

டிச. 21ம் தேதி மாலை வானத்தை பாருங்கள்: 397 ஆண்டுக்குப் பிறகு அதிசயம்.

 


வியாழன், சனி கிரகங்கள் நெருக்கமாக வரும் அரிய நிகழ்வு, 397 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 21ம் தேதி வானில் நடக்க உள்ளது. 



இது குறித்து எம்பி பிர்லா கோளரங்கத்தின் இயக்குனர் தேபி பிரசாத் துரை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய கிரகங்களான வியாழனும். சனியும் கடைசியாக 1623ம் ஆண்டு அருகருகே தோன்றின. அதற்கு பிறகு, இந்த இரு கிரகங்களும் மிக நெருக்கமாக வருகிற நிகழ்வு 21ம் தேதி நடக்க உள்ளது. 






அப்போது, 2 கிரகங்களும் சிறிய நட்சத்திரங்களை போல் தோற்றமளிக்கும். இது, ‘கிரகங்களின் மிகப்பெரிய இணைப்பு,’ என்று அழைக்கப்படுகிறது,’ என கூறியுள்ளார். இந்த அரிய நிகழ்வுக்குப் பிறகு, அடுத்ததாக வரும் 2080ம் ஆண்டு, மார்ச் 15ம் தேதி இந்த 2 கிரகங்களும் மீண்டும் அருகருகே தோன்ற உள்ளன. 21ம் தேதி நடக்கும் அரிய சம்பவத்தை, நாட்டின் முக்கிய நகரங்களில் மாலை சூரிய அஸ்தமனத்துக்கு பிறகு காண முடியும்.

No comments:

Post a Comment

Post Top Ad