டிசம்பர் 5 ஆம் தேதி தான் இறந்தாரா ஜெயலலிதா? - ஆறுமுகசாமி அறிக்கையில் புது விளக்கம் - Asiriyar.Net

Post Top Ad

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, October 18, 2022

டிசம்பர் 5 ஆம் தேதி தான் இறந்தாரா ஜெயலலிதா? - ஆறுமுகசாமி அறிக்கையில் புது விளக்கம்

 
ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையில், அவர் இறந்த தேதி குறித்து முரண்பட்ட கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான 600 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கையை ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி சமீபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அளித்தார். 


இந்நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


இந்த அறிக்கையில் சசிகலா, மருத்துவர் கே.எஸ். சிவகுமார், அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போதைய மருத்துவத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகிய 4 பேர் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், அப்போலோ மருத்துவர் பிரதாப் ரெட்டி மீதும் விசாரணை நடத்த பரிந்துத்துள்ளது. 


அதுமட்டுமின்றி, ஜெயலலிதா இறந்த தேதியில் முரண்பட்ட கருத்துகள் வந்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


அதாவது ஜெயலலிதா இறந்த தேதி 2016, டிசம்பர் 5 ஆம் தேதி இரவு 11.30 என்று மருத்துவமனை அறிக்கை அளித்த நிலையில், விசாரணையில் டிசம்பர் 4 ஆம் தேதி பிற்பகல் 3 முதல் 3.50 மணிக்குள்  இறந்திருக்கலாம் என சாட்சியங்கள் தெரிவித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. 


ஜெயலலிதா இறந்த தேதியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


2012ல் ஜெயலலிதாவும் சசிகலாவும் இணைந்த பின்னர் இருவரிடமும் சுமூக உறவு இல்லை, ஜெயலலிதா விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என பொய் அறிக்கை விடப்பட்டுள்ளது, எய்ம்ஸ் மருத்துவக்குழு எந்த மருந்தையும் சிகிச்சையும் பரிந்துரைக்கவில்லை உள்ளிட்ட தகவல்களும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.


Post Top Ad