CPS ஓய்வூதிய வழக்கு - இன்றைய விசாரணை நிலவரம் - Asiriyar.Net

Thursday, December 11, 2025

CPS ஓய்வூதிய வழக்கு - இன்றைய விசாரணை நிலவரம்

 





ஓய்வூதிய வழக்கில் மனுதாரரின் கேள்விகளுக்கு தமிழ்நாடு அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. தலைமை வழக்கறிஞர் ஆஜர்.



திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பிரெடெரிக் எங்கெல்ஸ் என்பவர் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தக்கோரி தொடர்ந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நீதியரசர்கள் G.R. சுவாமிநாதன், R. கலைமதி அமர்வில் இன்று (11.12.2025)விசாரணைக்கு வந்தது.*




*இவ்வழக்கில் அரசின் சார்பில் அரசு தலைமை வழக்கறிஞர் ( Advocate General) ஆஜராகி 01.04.2003 முதல் புதிய ஓய்வூதியத் திட்டம் தமிழ்நாட்டில் அமலில் உள்ளது. மனுதாரர் 2005 ஆம் ஆண்டில் பணியில் சேர்ந்து உள்ளார். 2012 ஆம் ஆண்டுதான் வழக்கு தொடர்ந்துள்ளார். பங்களிப்பு ஓய்வூதியத் தொகை LIC ல் முதலீடு செய்யப்பட்டு GPF தொகைக்கு இணையாக வட்டி வழங்குவதால் 0.6% அரசிற்கு இழப்பு ஏற்படுகிறது. இதுநாள் வரை ஓய்வு பெற்ற 54,000 பேரில் 51,000 பேருக்கு பணப்பலன் வழங்கப்பட்டுள்ளது. அரசாணை எண்கள்: 259, 430, 304 ஆகியவற்றை எதிர்த்து இதே காரணத்திற்காக தொடரப்பட்ட பல வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. அதேபோல் இவ்வழக்கினையும் தள்ளுபடி செய்யக் கோரினார்.*



*அப்போது குறுக்கிட்ட நீதியரசர் போக்குவரத்து தொழிலாளர்களின் ஓய்வூதியத் தொகை குறித்து வினா எழுப்பியதுடன் மனுதாரரின் புதிய ஓய்வூதியத் திட்டம் குறித்த எழுத்துப் பூர்வமான கேள்விகளுக்கு வரும் திங்கட்கிழமை பதிலளிக்க உத்தரவிட்டு நீதியரசர்கள் 15.12.2025 அன்றைக்கு பிற்பகல் 2.15க்கு வழக்கை ஒத்திவைத்தனர்.


No comments:

Post a Comment

Post Top Ad