நாம் 4 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆண்டுதோறும் 15 நாள்கள் அல்லது இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை 30 நாள்கள் என்று பணமாக்கிக் கொண்டிருந்த EL Surrender / Surrender Leave Salary என்பது 100% வருமானவரி விதிப்பிற்கு உட்பட்ட வருமானம் தான். நம்மில் பலர் இதற்கும் சேர்த்தே வரி செலுத்தியும் வந்திருப்போம். 4 வருட இடைவெளி, இன்று EL Surrender-ஆல் TAXஐ தவிர்க்க முடியுமா என்பது குறித்த சிந்திக்க வைத்துள்ளது.
பணி ஓய்வின் போது மொத்தமாக (அதிகபட்சம் 240 நாள்கள்) ELஐ ஒப்படைவு செய்து பணமாக்கிக் கொண்டால் மட்டுமே அதற்கு வருமான வரி இல்லை. எனவே வரியைத் தவிர்க்க வேண்டுமானால் பணி ஓய்வு வரைக் காத்திருந்து பெற்றுக் கொள்ளலாம். ஆனால், அதே நேரம் நமது பணி ஓய்வுக் காலம் வரை நமக்கு ELஐ மொத்தமாக ஒப்படைவு செய்யும் உரிமை இருக்குமா? என்றால், 100% அதற்கு உத்தரவாதமில்லை. இருக்கலாம்! இல்லாமலும் போகலாம்! ஏன்னா நம்ம ஒத்துமயோட எஸ்டீடி அப்புடீ. ஆகையால் ELஐ சேர்த்து வைத்து ஒப்படைவு செய்யலாம் என்பது Subject to our own risk.
சரி, ஆண்டுதோறும் பெற்றுக்கொண்டால் வரி வருமா? வராதா? என்றால், அது 100% வரி விதிப்பிற்கு உட்பட்ட தொகையே. உங்களது மொத்த ஆண்டு வருமானம் & ஆண்டுதோறும் அரசு வெளியிடும் வருமானவரி கணக்கீட்டின் அடிப்படையில் வரியைத் தவிர்க்க இயலுமா? அல்லது எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? என்பதை முடிவு செய்ய முதலில் நீங்கள் Total Gross Income, Net Taxable Income, Tax Slab, Rebate, Marginal Relief உள்ளிட்டவை பற்றி நாம் தெளிந்திருக்க வேண்டும்.
`Total Gross Income :`
New regimeஐப் பொறுத்தவரை (மாற்றுத்திறனாளி போக்குவரத்துப் படி தவிர) எந்தவிதக் கழிவும் இல்லை என்பதால், ஊதியத்தின் (Pay + DA + All other Allowances) Gross Income முழுமையாக வரிக்கணக்கீட்டிற்கு எடுத்துக்கொள்ளப்படும்.
இதனுடன் EL Surrender + Any Pay Arrear + ITRல் தானாகவே வருமானவரித்துறையால் சேர்த்துக்கொள்ளப்படும் நமது Savings' / Investments' Interest உள்ளிட்ட அனைத்தும் சேர்ந்த தொகை தான் வருமானவரிக் கணக்கீட்டிற்கான Total Gross Income. (வரி கணக்கீடும் போது ITRல் வரும் வட்டி தொடர்பான தோராய வருமானங்களையும் முன்கூட்டியே கவனத்தில் கொள்வது நல்லது)
`Net Taxable Income :`
இந்த Total Gross Incomeல் இருந்து Standard Deductionஆக Rs.75,000/- கழிக்கப்பட்டு வரும் தொகைதான் வருமான வரி விதிப்பிற்கான இறுதி Net Taxable Income. இந்தத் தொகை 10ன் முழுமையாக்கப்பட்டுத்தான் வரி விதிக்கப்படும். (உதாரணமாக 104 = 100 என்றும் 105 = 110 என்றும் கணக்கில் கொள்ளப்படும்)
`Tax Slab :`
Net Taxable Incomeற்கு 2025-26 நிதியாண்டில் பின்வருமாறு வரி விதிக்கப்படுகிறது.
Rs.4,00,000 வரை - வரியில்லை
Rs.4,00,001 to Rs.8,00,000 - 5%
Rs.8,00,001 to Rs.12,00,000 - 10%
Rs.12,00,001 to Rs.16,00,000 - 15%
Rs.16,00,001 to Rs.20,00,000 - 20%
Rs.20,00,001 to Rs.24,00,000 - 25%
Rs.24,00,000க்கு மேல் - 30%
`Rebate :`
Net Taxable Income Rs.12,00,000/-க்குள் இருப்பின் அதிகபட்சமாக Rs.60,000/- வரை U/S.87Aன் கீழ் Rebate உண்டு.
அதாவது Net Taxable Income Rs.12,00,000/- எனில்,
- Rs.4,00,000 = 0% = 0
- Rs.4,00,000 = 5% = 20,000
- Rs.4,00,000 = 10% = 40,000
என்று மொத்தமாக Rs.60,000/- வரி வரும். இந்தத் தொகையை Rebate ஆகக் கழிப்பதன் மூலம் வரி சுழியமாக்கப்படும். இந்தத் தளர்வு Net Taxable Income Rs.12,00,000க்குள் இருந்தால் மட்டுமே பொருந்தும்.
`Marginal Relief :`
Net Taxable Income Rs.12,00,010/- என்று வெறும் 10 ரூபாய் கூடினால்கூட Rebate கிடையாது என்பதால் Rs.60,002/-ஐ வரியாகச் செலுத்தியாக வேண்டும். Tax marginல இருந்து வெறும் 10 ரூவா கூடுனது குத்தமா? என்ற எண்ணம் தோன்றுமல்லவா? இந்தக் குறையைப் போக்கத்தான் கடந்த 3 ஆண்டுகளாக Marginal Relief என்ற முறை நடைமுறையில் உள்ளது.
இதன்படி, Tax Marginஆன ரூ.12 இலட்சத்தைவிடக் கூடுதலாக எவ்வளவு வருமானம் ஈட்டியுள்ளோமோ அதற்கு மட்டும் Tax கட்டினால் போதும். உதாரணமாக Net Taxable Income Rs.12,00,010/- என்றால், 12 இலட்சத்தைவிடக் கூடுதலாக உள்ள அந்த 10 ரூபாயை மட்டும் அப்படியே வரியாகக் (+ 4% Cess) கட்டிக் கொள்ளலாம்.
இந்த Marginal Relief முறை என்பது Net Taxable Income Rs.12,70,580/- வரை பயன்படுத்தப்படும்.
அதாவது, Net Taxable Income Rs.12,70,580/- எனில், செலுத்த வேண்டிய வருமானவரி 12 இலட்சத்தைவிடக் கூடுதலாக உள்ள அந்த 70,580 ரூபாய் மட்டுமே (+ 4% Cess).
இதற்கு மேலான தொகை, அதாவது Net Taxable Income Rs.12,70,590/- எனில் இந்தக் கூடுதல் தொகையும், வழக்கமான கணக்கீட்டிற்கான வரியும் கிட்டத்தட்ட சமமாக வந்துவிடும்.
- Rs.4,00,000 = 0% = 0
- Rs.4,00,000 = 5% = 20,000
- Rs.4,00,000 = 10% = 40,000
- Rs.70,590. = 15% = 10,589
மொத்த வரி = 70,589
இதற்கும் மேலான தொகைக்கு அப்படியே வரி கூடத் தொடங்கிவிடும் என்பதால், இதற்கு மேலான தொகைக்கு Marginal Reliefன் தேவை இருக்காது.
அதுசரி. . . 12 இலட்சத்துக்கு மேலே வரும் தொகையைக் கட்டினால் போதுமென்றால் எப்படி? அதற்கென ஒரு கணக்கீடு இருக்க வேண்டுமல்லவா? இருக்கிறது.
*Marginal Relief = Actual Tax - Excess Income*
என்று கணக்கிடப்படும் Marginal Relief தொகையை மொத்த வருமானவரியில் இருந்து கழித்துவிட்டால், நிகர வருமானவரி (Net Tax) கிடைத்துவிடும்.
உதாரணமாக Net Taxable Income Rs.12,10,000/- எனில்,
இதற்கான Actual Tax = 61,500
ரூ.12Lஐ விடக் கூடுதல் வருமானம் = Rs.10,000
ஃ Marginal Relief = 61,500 - 10,000 = Rs.51,500
ஆக, Net Taxable Income Rs.12,10,000/-க்கான நிகர வருமான வரி என்பது,
= Total Tax - Marginal Relief
= 61,500 - 51,500
= Rs.10,000/-
ரைட்டு. . . இப்ப Total Gross Income, Net Taxable Income, Tax Slab, Rebate, Marginal Relief பத்தியெல்லாம் தெரியும்; இந்த வருசம் EL போட்டா எனக்கு வரி வருமா? வராதா? என்றால்,
Standard deduction Rs.75,000/- கழித்தது போக உங்களது வருமானம் Rs.12,00,004/- எனில், இதனை 10ன் முழுமையாக்கினால் Net Taxable Income Rs.12,00,000/-. இதற்கு Tax வராது.
Standard deduction Rs.75,000/- கழித்தது போக உங்களது வருமானம் Rs.12,00,005/- எனில், இதனை 10ன் முழுமையாக்கினால் Net Taxable Income Rs.12,00,010/- இதற்கு ரூ.10ஐ வரியாகக் கட்ட நேரிடும். (+ 4% Cess)
அதாவது Net Taxable Income Rs.12,00,010/- முதல் Rs.12,75,580/- வரை 12 இலட்சத்தைவிடக் கூடுதலான வருமானத்தை மட்டும் வரியாகச் செலுத்தியாக வேண்டும்.
மேலும் HRA, CCA, Hill & Winter Allowances என்று மொத்த ஊதியம் இடத்திற்கு இடம் மாறுபடும் என்பதால், பொத்தாம் பொதுவான எந்தத் தகவலையும் உங்களுக்குமானதே என்று எண்ணாது, உங்களது முழுமையான ஊதியத்தைப் பொறுத்து நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள். இப்போது வரி வரும் என்பதால் EL Surrender செய்யாது அடுத்த ஆண்டு 15 / 30 என்று செய்வேன் என்றால், உறுதியாக இப்போது இருப்பதைவிட அடுத்த ஆண்டில் Increment உள்ளிட்டவற்றால் தங்களது வருமானம் உயர்ந்து கூடுதலாகத்தான் வரி செலுத்த நேரிடும். எனவே, நிதானமாகக் கணக்கிட்டு முடிவெடுங்கள்.
_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_
No comments:
Post a Comment