சத்துணவு திட்டத்தின்கீழ், முக்கிய தலைவர்கள் பிறந்தநாளில் மதிய உணவுடன் இனிப்பு பொங்கல் வழங்கப்படும் என அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் சத்துணவு திட்டம் அமலில் உள்ளது. 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிய உணவும், 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவும் வழங்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும் மொத்தம் 43,131 சத்துணவு மையங்களில் இத்திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதில், ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வகையான உணவுகள் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், முக்கிய தலைவர்கள் பிறந்தநாளில் மதிய உணவுடன் இனிப்பு பொங்கல் வழங்கப்படும் என அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு இனிப்பு பொங்கல் வழங்கப்படும்.
இதற்காக ரூ.4.27 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள 43,131 சத்துணவு மையங்களிலும் வழங்குவது தொடர்பாக அரசாணை வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment