திருநங்கை ஆசிரியருக்கு நேர்ந்த அநீதி! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, January 3, 2024

திருநங்கை ஆசிரியருக்கு நேர்ந்த அநீதி!

 

உத்தரப் பிரதேசத்தில் உள்ள தனியார் பள்ளியில் பணிபுரிய பள்ளியால் தேர்ந்தெடுக்கப்பட்ட திருநங்கை ஆசிரியர் 6 நாள்களில் வேலையை விட்டு நீக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. 


குஜராத்தில் அதே ஆசிரியருக்கு பணி நியமனக் கடிதம் வழங்கப்பட்டு அவரது பாலினம் தெரிந்தபின் அவருக்கு வேலை மறுக்கப்பட்டுள்ளது. இந்த அநீதிகளைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தை நாடிய ஆசிரியர், தன் பாலினத்தை காரணமாகக் கொண்டு இரண்டு பணிகள் தன்னை பணியிலிருந்து நீக்கியதாக குற்றம் சாட்டியுள்ளார்.


பள்ளி நிர்வாகங்கள் உரிய பதிலையளிக்க வேண்டும் என உச்சநீதி மன்றம் தெரிவித்துள்ளது. மேலும் முடிந்த உதவிகளை செய்வதாக தலைமை நீதிபதி டி.வொய். சந்திரசூட், நீதிபதிகள் ஜே. பி. பர்டிவ்லா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் கூறியுள்ளனர்.


குஜராத் மற்றும் உத்திரப் பிரதேச அரசுகளுக்கு நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ள நிலையில், தனது அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளதாக அந்த திருநங்கை ஆசிரியர் கூறியுள்ளார். 


Post Top Ad