என்னதான் சார் பிரச்சினை ? என்ன சொல்கிறது, அரசாணை 243 ? - Asiriyar.Net

Thursday, January 4, 2024

என்னதான் சார் பிரச்சினை ? என்ன சொல்கிறது, அரசாணை 243 ?

 


எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி அவர்கள் முதலமைச்சராக இருந்த காலத்திலும்கூட இந்தக் கட்டமைப்பில் கை வைக்கவில்லை.


ஆனால், என்ன துணிச்சல்? குறைந்தபட்சம் ஆசிரியர் சங்கங்களுடன்கூட கலந்துரையாடாமல், தான்தோன்றித்தனமாக ஊராட்சி ஒன்றிய அலகினில் உள்ள தொடக்கக் கல்வி ஆசிரியர்களை மாநில அளவிலான முன்னுரிமை பட்டியலில் இடம்பெறுவார்கள் என்பதாக மாற்றியமைத்திருக்கிறார்கள். மாவட்ட அளவில்கூட முன்னுரிமை பட்டியலை தயாரிப்பது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டுமென்று நீதிமன்ற வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டிருந்த அம்சங்களைக்கூட கணக்கில் கொள்ளாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்பதாக இந்த நடைமுறையை கொண்டு வந்திருக்கிறார்கள்.



எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆகும் என்ற பெருமை இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டுமே உரியதாகும். சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு போராடிவரும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு நேரடியாக இனிமேல் இல்லை என்று இந்த அரசாணை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 60 ஆண்டுகால கல்வி நிர்வாகக் கட்டமைப்பை சீர்குலைத்து வரலாற்று பிழையினை செய்திருப்பதோடு, இதனை அமைச்சரின் சாதனைப்பட்டியலிலும் இடம்பெறச் செய்திருக்கிறார்கள். வேதனையாக இருக்கிறது.


* இதனால் ஆசிரியர்களுக்கு அல்லது கல்விச்சூழலில் என்ன பாதிப்பு ஏற்படும் என்கிறீர்கள்?


நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவிகளுக்கு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் இருவரில் எவர் அந்த பதவிக்கு முன்னர் வந்துள்ளார்களோ? அவர்கள் பதவி உயர்வு பெறலாம் என்பது இந்த அரசாணையில் மூலம் தடை செய்யப்பட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கு பதவி உயர்வு பெற முடியும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.


மாண்புமிகு பள்ளிகல்வித்துறை அமைச்சர் அவர்கள் எடுத்திட வேணுமாய் தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.


தொடக்கக் கல்வியை பாதுகாப்பதற்காகவும், தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு ஏற்படப் போகும் பேராபத்தினை தடுத்து நிறுத்துவதற்காக அனைத்து தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்கள் உடன் சென்னையில் கூடி அவர்களின் உணர்வலைகளை நேரலைகளாக தெரியப்படுத்த இருக்கிறார்கள் என்பதை தகவலுக்காக தங்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறோம்.” என்கிறார், மூத்த தொழிற்சங்கவாதி வா.அண்ணாமலை.



Post Top Ad